போத்தனூர் தபால் நிலையம் என்ற படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி விமர்சனரீதியாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்தை எழுதி, இயக்கி, நடித்துள்ளவர் பிரவீன். இப்படம் 1990 களில் உள்ள கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது கோயமுத்தூர் மாவட்டம் போத்தனூரில் உள்ள தபால் நிலையத்தில் வெங்கட்ராமன் என்பவர் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்க்கிறார். அவரது மகனாக பிரவீன் கம்ப்யூட்டர் இன்ஜினியர் முடித்து தொழில் தொடங்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தபால் நிலையத்தில் உள்ள பணம் எதிர்பாராதவிதமாக திருடு போகிறது.
அதை எப்படி பிரவீன் கண்டு பிடிக்கிறார் என்பதே படத்தின் கதை. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தபால் நிலையத்தை சுற்றியே படமாக்கப்பட்டுயுள்ளது. அந்த தபால் நிலைய செட்டை வடிவமைத்தவர் கலை இயக்குனர் சதீஷ். ஆனால் இவருடைய பெயர் படத்தில் எங்குமே குறிப்பிடவில்லை.
இதைப்பற்றி சதீஷ் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது ஒரு தபால் நிலையத்தில் கண்டிப்பாக அம்பேத்காரின் போட்டோ இடம் பெற்றிருக்கும். ஏனென்றால் நாட்டின் சட்டத்தையே வடிவமைத்து கொடுத்தவர் அம்பேத்கர் தான். அதனால் சதீஷ் அம்பேத்கர் புகைப்படத்தை தபால் நிலையம் செட்டில் வைத்துள்ளார்.
ஆனால் போத்தனூர் தபால் நிலையம் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பிரவீன் வெங்கட்ராமன் இருவரும் செட்டில் இருந்த அம்பேத்கர் போட்டோவை மூத்திர சந்தில் தூக்கி எறிந்தார்கள் என கலை இயக்குனர் சதீஷ் ஒரு ஊடகத்தில் கூறியுள்ளார்.
இதனால் சதீஷ் மற்றும் இயக்குனர் பிரவீன் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. அதன் பிறகு இப்படத்தில் இருந்து சதீஷ் விலகிவிட்டார். பிறகு மீதமுள்ள செட்டை இயக்குனர் பிரவீன் அமைத்து அதில் காந்தியின் புகைப்படத்தை மாட்டியிருந்தார்கள். இயக்குனருக்கு அம்பேத்கர் மீது இவ்வளவு கோபம் ஏன் என்பது தெரியவில்லை என சதீஷ் குறிப்பிட்டுள்ளார்.