வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பருத்திவீரன் படத்தில் ராமதாஸை கவனிச்சீங்களா.! எவ்வளவு பெரிய சம்பவத்தை செஞ்சுட்டு அசால்டா அமீர் சொன்ன பதில்

Ameer – Paruthiveeran Movie, Ramadas: எங்கு பார்த்தாலும் சோசியல் மீடியாவில் இப்போது இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை குறித்த பேச்சு தான். ஏனென்றால் சமீபத்தில் ஞானவேல் அளித்த பேட்டியில், இயக்குனர் அமீர் தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு சுரண்ட முடியுமோ சுரண்டி விடுவார், அவர் ஒரு திருடன், வேலையை தெரியாத ஆள் என்றெல்லாம் தரக்குறைவாக பேசினார்.

இதற்கு அமீர் ஆதரவாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தான் அமீர் கலந்து கொண்ட நேர்காணலில் சர்ச்சைக்குரிய விஷயத்தை ரொம்பவே அசால்ட் ஆக பேசி இருக்கிறார். அந்த பதிலைக் கேட்டு கோலிவுட் வட்டாரமே அதிர்ந்து போய் உள்ளனர். ஒருபுறம் சர்ச்சை இருந்தாலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவிற்கு அமீர் கார்த்தியை அறிமுகப்படுத்திய பருத்திவீரன் படத்தில், ஒரு சமுக கட்சி தலைவரும் அரசியல்வாதியுமான மருத்துவர் ராமதாஸ் பெயரை பயன்படுத்தி இருப்பார். பருத்திவீரன் படத்தில் கார்த்தியின் தாய்- தந்தை கலப்பு திருமணம் செய்ததால், அவர்களை லாரி வைத்து விபத்தில் இறப்பது போல் கொன்று இருப்பார்கள்.

Also Read: அமீர்க்கு ஒன்னுனா நாங்க சும்மா இருக்க மாட்டோம் கௌதம், வீரா.. ராஜனுக்கு வக்காலத்து வாங்கிய 6 பிரபலங்கள்

ராமதாஸை வம்பு கிழித்த அமீர்

அந்த லாரியின் பெயர் ராமதாஸ். இந்த சீன் திட்டமிட்டு எடுக்கப்பட்டதா? இல்லை, எதார்த்தமாக நடந்ததா? என அமீரிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமீர், ‘இது திட்டமிட்டு நடக்கவில்லை. ஆனால் சூட்டிங்கிற்கு ஒரு லாரி வேணும் என கேட்டதும் அந்த பெயர் கொண்ட லாரி வந்ததும், அதை மாற்றாமல் அப்படியே பயன்படுத்திக் கொண்டோம்.

paruthiveeran-ramadas-ameer-reply
paruthiveeran-ramadas-ameer-reply

உண்மையிலேயே இந்தப் பெயர் கொண்ட லாரியை கொண்டு வாருங்கள் என சொல்லவில்லை. ராமதாஸ் என எழுதப்பட்ட லாரி வந்தது. படத்தின் காட்சிக்கும் அந்தப் பெயருக்கும் ஒரு தொடர்பு இருந்ததால் அதை பயன்படுத்திக் கொண்டோம்’ என்று வெளிப்படையாக அமீர் இந்த விஷயத்தை பயமில்லாமல் சொன்னார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Also Read: தலைக்கு மேல வெள்ளமே போனாலும் அமீர் இல்லாம வாடிவாசல் இல்ல.. வெயிட்டான ரோல் கொடுத்திருக்கும் வெற்றிமாறன்

Trending News