வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அமீருக்கு அடிமேல் அடி கொடுத்த சிவக்குமார் குடும்பம்.. ஊரைவிட்டு ஓடிய இயக்குனர்

Director Ameer: கடந்த ஒரு வாரங்களாகவே சமூக வலைத்தளங்களில் பருத்திவீரன் பட பிரச்சனை மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் பற்றி தவறான விமர்சனங்களை முன் வைத்தது பல இயக்குனர்களால் கண்டிக்கப்பட்டது. ஞானவேல் ராஜா முன் வந்து மன்னிப்பு கேட்ட பிறகும், அந்த மன்னிப்பை யாரும் ஏற்பதாய் இல்லை.

நடிகர்கள் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இந்த பிரச்சனையில் மக்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் தங்கள் குடும்பத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை ஒன்று சமூக வலைதளத்தில் மாட்டுச்சியாய் பரவிக் கொண்டிருக்கும் பொழுது, எனக்கென்ன என்று வாயை மூடிக்கொண்டு இவர்கள் இருப்பது தான்.

Also Read:அமீரிடம் கதை கேட்டு விட்டு தளபதி சொன்ன விஷயம்.. பல வருடம் கழித்து வெளிவந்த சீக்ரெட்

இந்த பருத்திவீரன் பஞ்சாயத்து முடிவதற்குள்ளேயே, மற்றொரு பிரச்சனை தலை தூக்கி இருக்கிறது. இயக்குனர் அமீர், நடிகர் சிவகுமார் குடும்பத்தார் எந்த அளவுக்கு கஷ்டத்தை அனுபவித்திருக்கிறார் என்பதை நிறைய பிரச்சனைகளின் மூலம் சினிமா துறையை சேர்ந்தவர்கள் எடுத்துரைத்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு படத்தின் மூலம் அமீருக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்தியது தெரிய வந்திருக்கிறது.

அச்சமில்லை அச்சமில்லை

இயக்குனர் அமீரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த முத்து கோபால் என்பவர் அச்சமில்லை அச்சமில்லை என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அமீர், ஜெயப்பிரகாஷ், சாந்தினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தன்னுடன் இருந்த உதவி இயக்குனரை வளர்த்து விட வேண்டும் என்ற முயற்சியில் டீம் ஒர்க் என்னும் பேனர் கீழ் அமீர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.

சென்சார் சர்டிபிகேட் எல்லாம் வாங்கிய பிறகு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நாங்கள் இந்த படத்தை விநியோகிக்கிறோம் என்று சொல்லி வாங்கி இருக்கிறார்கள். அதன் பின்னர் படத்தைப் பற்றி எந்த ஒரு பேச்சும் இல்லை. படம் ரிலீஸ் ஆகாமல் கடன் ஆனதால் இயக்குனர் முத்து கோபால் தன் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு ஊரை விட்டு ஓடி விட்டாராம். அமீருக்கு இதன் மூலம் ஒரு கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உரிமையாளர்கள் நடிகர் சிவகுமாரின் நெருங்கிய உறவினர்கள் அவர். அச்சமில்லை அச்சமில்லை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். அவர் ஃபர்ஸ்ட் போஸ்டரை வெளியிட, நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து ட்ரெய்லரை வெளியிட்டு இருக்கிறார்கள். மிகப்பெரிய கனவுகளோடு உருவாக்கப்பட்ட அந்த படத்தை முடக்கி இருக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்.

Also Read:கை கொடுத்து தூக்கி விட்டவருக்கு நீங்க காட்டுற நன்றி கடனா.? 5 வருஷமாக எட்டி கூட பார்க்காத விஜய்

Trending News