புதன்கிழமை, ஜனவரி 8, 2025

அமீர் ஊற்றிய ஜொள்ளால் மிதந்த பிக்பாஸ் வீடு.. கடுப்பாகி வண்ட வண்டயா திட்டிய ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் நேற்று பல கடுமையான போட்டிகள் போட்டியாளர்களுக்கு தரப்பட்டது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மற்றொரு புறம் சத்தமில்லாமல் ஒரு லவ் ட்ராக் ஓடிக்கொண்டிருந்தது.

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதல் இருந்தே அமீர், பவானியின் மீது ஒரு கண்ணாக சுற்றி வருகிறார். எப்படியாவது பவானியை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்று பல வேலைகள் பார்த்து வந்தார். அதில் ஒன்றாக அபிநய் விஷயத்தை கையில் எடுத்து அதை பெரிது படுத்தினார்.

இதனால் பவானி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அமீர் சமீபகாலமாக பவானியுடன் நெருக்கமாக பழகுவதற்கு முயற்சி செய்கிறார். நேற்று அவர் பவானியை பார்த்து ஊற்றிய ஜொள்ளு பிக்பாஸ் வீட்டயே மிதக்கச் செய்தது.

நேற்று பவானி அழகாக புடவை கட்டியிருந்தார். அதைப் பார்த்த அமீர், பவானியிடம் உங்களுக்கு சேலை நல்லா இருக்கு என்று வெளிப்படையாக ஜொள்ளு விட்டார். ஆனால் அதை பவானி கண்டும், காணாதது போல் இருந்தார். ஆனாலும் விடாத அமீர், பிரியங்காவிடம் சென்று தனக்கு இந்த மாதிரி ஒரு பெண் அமைய வேண்டும் என்று கூறினார்.

பிரியங்காவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அமீரின் கண்கள் பவானியின் மீதே நிலைத்திருந்தது. மேலும் பவானி எப்பொழுதெல்லாம் தனியாக அமர்ந்து இருக்கிறாரோ உடனே இவரும் சென்று பேச்சுக் கொடுக்கிறார். இதனால் கடுப்பான பவானி ஒரு கட்டத்தில் பிக்பாஸ் அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் என்று கூறினார்.

அதற்கு அமீர் அப்படின்னா நாம ரெண்டு பேரும் கைய பிடிச்சுகிட்டு ஒன்னாவே வெளியே போவோம் என்று சொன்னார். பவானி என்னதான் வாய் வார்த்தையில் அவரிடம் இருந்து ஒதுங்க வேண்டும் என்று சொன்னாலும், அமீரின் பேச்சை அவர் ரசிப்பது பவானியின் முகத்தில் நன்றாக தெரிகிறது.

மேலும் இரவு நேரத்தில் பவானி மற்றும் அமீர் மட்டும் தனியாக கார்டன் ஏரியாவில் அமர்ந்திருக்கின்றனர் அப்பொழுது அமீர் நிலவு வெளிச்சத்தில் நாம் இருவரும் இருப்பது போன்று பேசுவோமா என்று வெக்கமில்லாமல் பவானியிடம் கேட்டார்.

நேற்று முழுவதும் இது போன்ற பல செய்கைகளைச் செய்து அமீர் பார்வையாளர்களை எரிச்சல் ஆக்கியதால் வண்ட வண்டயா திட்டி தீர்த்து வருகின்றனர். எப்படியாவது அவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சோசியல் மீடியாவில் பலரும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

Trending News