திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த அமீர்.. 16 வருஷமா துரோகிகளை படிக்க முடியல!

Director Ameer : பருத்திவீரன் படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் இயக்குனர் அமீர். கடந்த சில தினங்களாகவே அமீரை பற்றிய செய்திகள் இணையத்தில் உலாவி கொண்டிருக்கிறது. 16 ஆண்டு ஆகியும் முடியாமல் ஒரு பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது. அதாவது கார்த்தியின் ஜப்பான் படம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகி இருந்தது. அந்த படத்தின் நிகழ்ச்சியில் அமீரை அழைக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய அமீர் பருத்திவீரன் படத்தால் தான் 2 கோடிக்கும் அதிகமான கடனில் தள்ளப்பட்டிருந்ததாக கூறியிருந்தார். இதை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அமீருக்கு அவ்வளவு சீன் எல்லாம் இங்கு கிடையாது. மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் பணியாற்றிய போதே என்னிடம் அமீர் கடன் வாங்கியிருந்தார்.

அப்போது தான் பருத்திவீரன் படத்தை 2.75 கோடி பட்ஜெட்டில் எடுத்து தருவதாக சொல்லிவிட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இழுத்தடித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் பட்ஜெட்டும் 4 கோடி வரை ஆகிவிட்டது. இவ்வாறு அமீர் தான் தன்னை மோசடி செய்ததாக ஞானவேல் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார்.

Also Read : ரஜினிய சீண்டி பார்ப்பது முட்டாள்தனம், தெளிவான விளக்கம் கொடுத்த ஞானவேல்.. சரியான தலைவனா இத செய்யுங்க

இந்நிலையில் ஒரு சிறப்பு நேர்காணலில் தன்னைத்தானே கேள்வி கேட்கும்படி ஒரு பேட்டி நடத்தினார். அதில் துரோகத்தைப் பற்றி அவர் கூறுகையில் என்னுடைய முதல் தொடக்கமே துரோகத்தில் இருந்து தான் ஆரம்பித்ததாக கூறியிருந்தார். மேலும் அதெல்லாம் தனக்கு ஒரு சிறந்த பாடமாகத்தான் அமைந்தது.

அதிலிருந்து தான் அடுத்து என்னால் ஒரு விஸ்வரூப வளர்ச்சி எடுக்க முடிந்தது என்று அமீர் கூறி இருக்கிறார். மேலும் சினிமாவை கற்றுக் கொண்டாலும், சினிமாவில் உள்ள நபர்களை எப்படி கையாள்வது என்பது தற்போது வரை தனக்கு தெரியவில்லை. உறவு, நட்பு ஆகியவற்றோடு பயணித்து வந்ததால் என்னால் ஒன்ற முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

அவமானம் மற்றும் துரோகம் ஆகியவை தான் தொடர்ந்து தான் சந்தித்து வந்ததாகவும், சில நட்புதான் இப்போதும் என்னுடைய வளர்ச்சியை கொண்டு சென்று கொண்டிருக்கிறது என ஒரு புது உத்வேகத்துடன் இப்போது அமீர் பேட்டி கொடுத்திருக்கிறார்.

Also Read : அஞ்சு மடங்கு லாபம் கொடுத்தும் அமீரை ஏன் திட்றாங்க தெரியுமா.? பருத்திவீரன் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Trending News