வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சுயமரியாதையை இழந்ததால் கொந்தளிப்புடன் பேசிய அமீர்.. நன்றியை மறந்த கார்த்தி

Karthi and Ameer: இயக்குனர் அமீரை பொறுத்தவரை மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பட்டென்று பேசக்கூடியவர். அப்படிப்பட்ட இவர் சமீபத்தில் கலந்து கொண்ட மாயவலை படத்தின் பிரஸ்மீட்டில் பல காரசாரமான விவாதங்களை முன் வைத்திருக்கிறார். அதாவது கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

அதில் கார்த்தி இதுவரை நடித்த படங்களின் இயக்குனர்கள் அனைவரும் கலந்து இருக்கிறார்கள். ஆனால் அமீர் மட்டும் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதைப்பற்றி அமீரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அமீர் நான் ஏன் கலந்து கொள்ள வேண்டும். எனக்கு சரியான விதத்தில் கார்த்தி அழைப்பு கொடுக்கவில்லை.

யாரோ ஒருவர் மாதிரி எனக்கு அழைப்பு கிடைத்தது. அதை வைத்து நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அது மட்டும் இல்லாமல் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும் எனக்கும் கடந்த 17 வருஷமாக தீராத ஒரு வழக்கு போய்க்கொண்டிருக்கிறது. அதற்காக நான் ஒவ்வொரு மாதமும் கோர்ட்டுக்கு போயிட்டு வருகிறேன்.

Also read: ஒரே பதிவில் கார்த்தி மானத்தை வாங்கிய ப்ளூ சட்டை.. ஃபாரின் பேருல படம் எடுத்தாலும் இப்படியா அசிங்கப்படுத்துரது!.

இப்படி இருக்கும் பொழுது அந்த நிகழ்ச்சியில் என்னால் எப்படி கலந்து கொள்ள முடியும். மேலும் கார்த்தி சினிமாவில் நுழையும் போது அவருக்கு சரியான அங்கீகாரத்தை கொடுத்து தூக்கி விட்ட இயக்குனர் நான் தான். பருத்திவீரன் படத்திற்கு ஏற்ற மாதிரி அவரை நான் செதுக்கி இருக்கிறேன்.

ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு எங்களுக்குள் இருந்த மனக்கசப்பை மட்டும் மனதில் வைத்து என்னை ஒதுக்கி வைக்கிறார். இப்படி இருக்கும் பொழுது என்னுடைய சுயமரியாதையை இழந்து அந்த நிகழ்ச்சிக்கு என்னால் வர முடியாது. தற்போது இவர் செய்கிற ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் பொழுது நான் ஏன் பருத்திவீரன் படத்தில் இவரை நடிக்க வைத்தேன் என்று தோன்றுகிறது எனக் கூறியிருக்கிறார்.

அந்த அளவிற்கு அமீர் ரொம்பவே பாதிப்படைந்து இருக்கிறார் என்பது அவருடைய பேச்சிலே தெரிகிறது. அத்துடன் மௌனம் பேசியது படத்தின் மூலம் சூர்யாவிற்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது. இப்படி அண்ணன் தம்பிகளை வைத்து எடுத்து வெற்றியை கொடுத்த ஒரே இயக்குனர் நான் தான். அப்படி இருக்கும் பொழுது நன்றியை மறந்து விட்டார்கள் என்று அமீர் மொத்த கோபத்தையும் கொட்டி தீர்த்து விட்டார்.

Also read: பாவனி கூட சுத்துறதுக்கு மட்டும் காசு இருக்கா.? உதவி கேட்டு அசிங்கப்பட்ட அமீர், பாலாவை பார்த்தும் திருந்தல பாரு

Trending News