புதன்கிழமை, ஜனவரி 15, 2025

4 வருடமாக கிடப்பில் போடப்பட்ட படத்தை கையிலெடுக்கும் அமீர்.. வெளியான அதிரடி அப்டேட்

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் அமீர். இவர் நடிகராகவும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார். இருப்பினும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது அமீரின் இயக்கத்தில் வெளியாகும் படங்களைத்தான். அதனால் தற்போது மீண்டும் அமீர் படங்களை இயக்கி வருகிறார்.

அமீர் மதுரையை மையமாக வைத்து சந்தனதேவன் எனும் படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் ஆர்யா மற்றும் சத்யா இருவரும் கதாநாயகர்களாக நடித்து இருந்தனர். ஆனால் இப்படம் பைனான்ஸ் பிரச்சனையால் எடுக்க தாமதமானது. அதனால் இப்படத்தினை அமீர் இயக்காமல் காத்திருந்தார்.

ஆனால் அமீர் சமீபகாலமாக சமுதாயத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதனால் பைனான்சியர்கள் பலரும் இப்படத்திற்காக செலவு செய்வதற்கு முன் வரவில்லை என அவரே ஒரு மேடையில் கூறியிருந்தார்.

santhanathevan-cinemapettai
santhanathevan-cinemapettai

இருப்பினும் தான் சமூக கருத்துக்களை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதனை நான் பார்த்துக் கொள்வேன் என சமுதாய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார்.

அமீர் சந்தனத்தேவன் படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார். இப்படத்திற்கு கிட்டத்தட்ட 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. மேலும் இப்படத்தில் ஒரு சில காட்சிகளில் எடுத்தவுடன் படத்தை வெளியிடுவதற்கான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது அமீர் இயக்கத்தில் படம் வெளியாகி பல வருடங்கள் ஆனதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending News