திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பவானி பின்னாடி சுத்தாத, வந்த வேலையை மட்டும் பார்.. அமீருக்கு வந்த எச்சரிக்கை

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவர் நடன இயக்குனர் அமீர். ஆரம்பத்தில் அவ்வளவு பிரபலமாகாத இவர் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

அதற்கு முக்கிய காரணம் சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி. இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடத்தும் ரொமான்ஸை பார்த்து சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து சர்ப்ரைஸ் கொடுக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட ஆரம்பத்தில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதைகளை பற்றி பேசினார்கள். ஆனால் தாமதமாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த சஞ்சீவ், அமீர் இருவரும் தங்கள் கதைகளைப் பற்றி கூறவில்லை. இதனால் பிக்பாஸ் அவர்களுக்கு இந்த வாய்ப்பை தற்போது வழங்கியுள்ளார்.

அதில் அமீர் தன்னுடைய சோகக்கதையை கண்ணீருடன் கூறி ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டார். தன் குடும்பத்தை பற்றி கூறிய அமீர் நான் அப்பாவை பார்த்ததே இல்லை, அம்மா, அண்ணா மட்டுமே என் உலகம். என் அம்மாவுக்கு நான் பெரிய டான்ஸராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.

அதற்காக என்னை பிரபுதேவா மாஸ்டர் டான்ஸ் பார்த்து ஆட செல்வார். இன்று நான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்த இடத்தில் நிற்பதற்கு என் அம்மா முக்கிய காரணம். ஆனால் அதை பார்த்து சந்தோஷப்பட என் அம்மா இப்போது இல்லை என்று வருத்தத்துடன் கூறினார்.

அமீரின் இந்த சோகக்கதை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை மட்டும் அல்லாது பார்வையாளர்களையும் மிகவும் உருக செய்துவிட்டது. இதைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்த நீங்கள் அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் தேவையில்லாமல் பவானியின் பின்னால் சுற்ற வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

அமீரின் காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் பவானிக்கு இந்த வாழ்க்கையாவது சிறப்பாக அமைய வேண்டும் என்று பவானி ரெட்டியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Trending News