புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சைடு கேப்பில் காதல் பிளாக் ஓட்டும் அமீர்.. செஞ்ச தப்பை மீண்டும் செய்யும் பாவனி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர் சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி. அவர் சக போட்டியாளர் அபிநயுடன் நெருங்கி பழகுவது பிக்பாஸ் வீட்டில் பெரும் விவாதமாக மாறியது.

இதில் கமல்ஹாசன் தலையிட்டு ஒரு வழியாக பிரச்சனையை முடித்து வைத்தார். அப்பொழுது காட்டப்பட்ட குறும்படத்தால் அதிர்ந்துபோன பவானி கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் அமைதி காத்து வருகிறார். ஆனால் அமீர், பவானி செல்லும் இடமெல்லாம் சுற்றி சுற்றி வந்து பேசுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் பிரியங்காவை அக்கா என்று அழைக்கும் அமீர் அதே வயதுடைய பவானியை மட்டும் ஒருமையில் பேசுவது, ஓவரா உரிமை எடுத்துக் கொள்வது என்று இருக்கிறார். வீட்டில் நடந்த கலவரத்தால் அபிநய், பவானியை விட்டு முற்றிலும் ஒதுங்கியுள்ளார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அமீர் சைடு கேப்பில் தன் காதல் லீலையை ஆரம்பித்துவிட்டார். அதாவது பவானி தன்னை அக்கா என்று சொல்லும்படி அமீரிடம் கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அமீர் உன் வாய் தான் சொல்லுது, கண்ணு அப்படி சொல்லவில்லை என்றார்.

உண்மையில் பவானி அப்படித்தான் இருக்கிறார். மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்ற எச்சரிக்கை உணர்வில் அமீரிடமிருந்து விலக பார்க்கிறார். ஆனாலும் அவர் அமீர் சொல்வதை எல்லாம் கேட்கிறார். நேற்று அமீர் பெட்டில் படுத்துக்கொண்டு பவானியை தனக்கு டீ எடுத்து வரும்படி கேட்டார்.

பவானியால் இதை நிச்சயம் மறுத்திருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யாமல் சிரித்துக்கொண்டே டீ எடுத்து வந்து கொடுத்தார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அமீர் தற்போது தனக்கு பிரபலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பவானியை பயன்படுத்திக் கொள்கிறார்.

இதற்காகத்தான் அபிநயை ஓரம் கட்டி விட்டு அந்த இடத்திற்கு அவர் வந்துவிட்டார். இதையெல்லாம் எதற்கு வம்பு என்று பார்த்தும் பார்க்காத மாதிரி சக போட்டியாளர்கள் அனைவரும் இருக்கின்றனர். அமீரின் இந்த செயல் பிக்பாஸ் ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.

Trending News