சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

Ameer : பருத்திவீரனாக கார்த்தியை உருவாக்கினதற்கு குற்றவாளி பட்டமா.? சூர்யா குடும்பத்தால் அமீருக்கு ஏற்பட்ட அதிருப்தி

அமீரின் திரைப்படம் தொடங்கியதே பருத்திவீரன் படத்தில் தான். இந்தப் படத்தில் பல பிரச்சனைகளை அமீர் சந்தித்தார். சமீபத்தில் கூட இது மிகப்பெரிய பூதாகரமாக வெடித்திருந்தது. ஞானவேல் ஆரம்பித்து வைத்த இந்த பிரச்சனையை அவரே மன்னிப்பு கேட்டு முடித்து வைத்தார்.

இந்நிலையில் இன்று அமீரின் உயிர் தமிழுக்கு படம் வெளியாகி இருக்கிறது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமீர் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது தன்னுடைய முதல் படத்தில் நான் தோற்று விட்டேன்.

பருத்திவீரன் படத்திற்காக புதிய நடிகரை உருவாக்கி, படத்தை எடுத்தது மட்டுமல்லாமல் அதற்கான முதலீட்டையும் நானே செய்தேன். ஆனால் தயாரிப்பு சங்கத்தில் என்னை குற்றவாளி போல் நிற்க வைத்தார்கள். 60 நாட்கள் அங்கு கைகட்டி தான் நின்றேன்.

பருத்திவீரனால் அமீர் பட்ட அவமானம்

பருத்திவீரன் படத்திற்கு சம்பந்தம் இல்லாத பலர் என்னை கேள்வி கேட்டனர். தயாரிப்பு சங்கத்தில் வைத்து தன்னை அவமானப்படுத்திய போது யாரும் வந்து எதுவுமே கேட்கவில்லை. பருத்திவீரனாக ஹீரோவை உருவாக்கியதுக்கு குற்றவாளி பட்டமா? அவரிடம் நாம் தானே வாய்ப்பு கேட்டோம் என்று கூட யோசிக்கவில்லை.

அப்போது நான் தனி ஆளாக தான் நின்றேன் என்று சூர்யா குடும்பத்தை பற்றி அமீர் பேசி இருந்தார். அதாவது பருத்திவீரன் பிரச்சனையில் சூர்யா குடும்பம் அமீர் பக்கம் ஒரு கருத்தையும் வைக்காதது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. தற்போது நடந்த பிரச்சனையில் கூட ஞானவேலுக்கு எதிர்ப்புகள் கிளம்பவே அவர் மன்னிப்பு கேட்டார்.

மேலும் சமீபத்தில் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக் தயாரிப்பில் அமீர் நடித்துள்ளார். இவர்கள் பல வருடங்களாக நட்புடன் பழகி வருவதால் அமீர் மீதும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து தேசிய அமீர் இப்போதும் இதனால் 70 நாட்கள் குற்றவாளியாக நிற்கிறேன், கண்டிப்பாக இதிலும் தனக்கு சம்பந்தம் இல்லை என்பதை நிரூபிப்பேன் என்று அமீர் கூறுகிறார்.

- Advertisement -spot_img

Trending News