வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜிகர்தண்டாவால் அடித்த அதிர்ஷ்டம்.. ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் லிஸ்ட்

Raghava Lawrence: ராகவா லாரன்ஸ் நடிப்பில் இந்த வருடம் வெளியான சந்திரமுகி 2 படம் அவருக்கு பெரிய தோல்வி படமாக அமைந்தது. ரஜினி பெயரையே கெடுத்து விட்டார் என்று ரசிகர்கள் பொங்கிக் கொண்டிருந்த வேலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ரிலீஸ் ஆகி ராகவா லாரன்ஸின் சினிமா மார்க்கெட்டையே தலைகீழாக மாற்றி விட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட மனம் திறந்து அவரை பாராட்டி இருந்தார். அதைத்தொடர்ந்து லாரன்ஸுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்திருக்கிறது.

லாரன்ஸ் கைவசம் இருக்கும் படங்கள்

தலைவர் 171: ராகவா லாரன்ஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிரமான ரசிகர் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் இவர்கள் இருவரும் இதுவரை படங்களில் இணைந்து நடித்ததில்லை. அந்தக் குறையை தலைவர் 171 இல் லோகேஷ் கனகராஜ் போக்க இருக்கிறார். ரஜினியுடன் சிவகார்த்திகேயன், ரன்வீர் கபூர் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியான நிலையில் லாரன்ஸும் நடிக்க இருக்கிறார்.

ஜி ஸ்குவாட்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதை எழுதி, தயாரிக்கும் படத்தை அவருடைய நண்பர் ரத்தினகுமார் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். கதாநாயகி தேர்வு விரைவில் நடத்தப்படும் எனவும் சொல்லப்படுகிறது. நயன்தாரா நடிப்பதற்கு பெரும்பாலான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.

Also Read:லோகேஷ் குழப்பத்திற்கு முடிவு கட்டிய ஷாருக்கான்.. இது என்னடா தலைவருக்கு வந்த சோதனை

ரவிக்குமார்: இயக்குனர் ரவிக்குமார் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் படம் ரிலீஸ் இருக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் ரவிக்குமார் அடுத்து சூர்யா அல்லது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு ஹீரோக்களுமே பிசியாக இருக்கும் நிலையில், ரவிக்குமாரின் அடுத்த கதையின் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக இணைகிறார்.

மந்திர மூர்த்தி: இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரை ஹீரோவாக வைத்து அயோத்தி என்னும் படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் மந்திர மூர்த்தி. இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் இயக்கும் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கோல்ட் மைன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

தளபதி 68: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து இருக்கிறார்கள். கன்னட நடிகர் கிச்சா சுதீப் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது ராகவா லாரன்ஸும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.

Also Read:தளபதியை குஷி படுத்த 5 ஹீரோயின்களை களம் இறக்கும் வெங்கட் பிரபு.. மார்க்கெட் குறையாத லைலா

Trending News