வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரே வீட்ல ரெண்டு பெட்ரூமா.? லிவிங் டு கெதரில் ஏக்கர் கணக்கில் புளுகும் அமீர், பாவனி ஜோடி

Amir-Bhavani: விஜய் டிவியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான் அமீர், பாவனி ஜோடி. இதில் பாவனி ஏற்கனவே சீரியல்கள் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் தான்.

ஆனால் இந்த ஜோடி காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்வது வரை அத்தனையும் சோசியல் மீடியாவில் வெகு பிரபலம். அந்த வகையில் அஜித்தின் துணிவு படத்தில் இணைந்து நடித்த இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.

Also read: காதலிக்காக எடுத்த புது அவதாரம்.. வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த அமீர் – பாவனி

இப்படி தங்கள் கேரியரில் பிஸியாக இருக்கும் இவர்கள் குறித்து அடிக்கடி பல சர்ச்சையான செய்திகளும் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் முக்கியமானது இவர்களுடைய லிவிங் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை பற்றியது தான். அதாவது இவர்கள் பெரியவர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

சுருக்கமாக சொல்லப்போனால் அரேஞ்ச் மேரேஜ் மாதிரி இது அரேஞ்ச் லிவிங் டு கெதர். ஆனால் ஒரே வீடாக இருந்தாலும் தனித்தனி பெட்ரூமில் தான் இவர்கள் வசித்து வருகிறார்கள். இதை ஒரு பேட்டியில் அவர்களே வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதை நம்புவதற்கு தான் யாரும் தயாராக இல்லை. அதாவது இவர்களுடைய இந்த லிவிங் டு கெதர் வாழ்க்கையை பற்றி சமீப காலமாக பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

Also read: இப்போதைக்கு கல்யாணம் இல்ல.. அமீர்-பாவனி லிவிங் டுகெதர் சீக்ரெட் இதுதான்

அதிலும் திருமணத்திற்கு முன்பாகவே இவர்கள் ஹனிமூன் சென்றார்கள் என்றும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள் என்றும் பல செய்திகள் உலா வந்தது. அதற்கு விளக்கம் கொடுத்துள்ள இந்த ஜோடி நாங்கள் எப்போதுமே பிரிய மாட்டோம். சினிமாவில் நாங்கள் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. அதன் பிறகு நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியுள்ளனர்.

அது மட்டுமின்றி ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனி ரூமில் தான் நாங்கள் இருக்கிறோம். முறையாக திருமணம் செய்து கொண்ட பிறகே எங்களுடைய தாம்பத்திய வாழ்வு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதை பார்த்த பலரும் இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று சத்தம் இல்லாமல் கிசுகிசுத்து வருகின்றனர்.

Also read: வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய கவின் பொண்டாட்டி.. லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுத்த மோனிகா

 

Trending News