புதன்கிழமை, ஜனவரி 15, 2025

16 மணி நேரமாக நடந்த போராட்டம்.. ஒரே முடிவால் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்த அமீர்

பிக்பாஸ் சீசன்5 போட்டியானது தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏனென்றால் இன்னும் மூன்றே வாரத்தில் போட்டி நிறைவடையவுள்ளது. அதனால் போட்டியாளர்கள் தங்களுக்குள் கடுமையாக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றர்.

இந்த நிலையில் நாமினேஷன் லிஸ்டில் இருந்து எஸ்கேப் ஆவதற்காக தலைவர் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று வீட்டில் இருக்கும் 10 போட்டியாளர்கள் வெறியுடன் காத்திருந்தனர். அதற்கேற்றார்போல் பிக் பாஸ் கயிறு ஒன்றைக் கொடுத்து, அதை கடைசிவரை யார் பிடித்து இருக்கிறார்களோ, அவர்கள்தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டன் என அறிவித்தார்.

அதன் பிறகு 10 போட்டியாளர்களும் விடிய விடிய கண்விழித்து, அந்தக் டாஸ்கை சிறப்பாக விளையாடினார். கடைசியாக தாமரை மற்றும் அமீர் இருவருக்குமிடையே போட்டி நிலவியது. அப்போது தாமரை அமீரிடம், ‘எனக்காக இந்த ஒரு முறை விட்டுக் கொடுத்துடு தம்பி’ என்று கெஞ்சி கேட்டார்.

அமீர் மற்றும் தாமரைச்செல்வி இருவரும் சுமார் 16 மணி நேரம் அந்தக் கயிற்றை  பிடித்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தாமரையால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் அமீரிடம் மீண்டும் மீண்டும் தாமரை கெஞ்சி கேட்க, உடனே அமீர் கயிற்றை விட்டு விட்டு போட்டியில் இருந்து விலகி விட்டார்.

அதன்பிறகு தாமரை, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இத்துடன் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருந்தும் தப்பித்துவிட்டார். இருப்பினும் 16 மணிநேரம் தாமரையுடன் போட்டியிட்ட அமீர் சுலபமாக தாமரைக் விட்டுக் கொடுத்தது ஒரு சில ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மேலும் கேப்டன் பதவிக்காக நடத்தப்பட்ட டாஸ்க் நிறைவு பெற்ற பிறகு நடைபெற்று நாமினேஷன் பிராஸஸில் அமீர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெறாதது, அமீர் தனக்கு கிடைத்த வெற்றியாகவே பார்த்தார்.

Trending News