பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானும் அவரது இரண்டாவது மனைவி கிரண் ராவும் தங்களது 15 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இனி தாங்கள் இணைந்து வாழப் போவதில்லை எனவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இவர்களின் இந்த விபரீத முடிவு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருப்பினும் மற்றொரு தரப்பினர் சமூக வலைதளங்களில் அமீர்கானை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். ஒவ்வொரு 15 ஆண்டுக்கும் ஒரு முறை மனைவியை விவாகரத்து செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என கிண்டல் செய்து வந்தனர்.
இந்நிலையில்தான், அமீர்கானை வைத்து ஹிந்தியில் ரங்கீலா எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மா அமீர்கானுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பதில் வல்லவரான ராம்கோபால் வர்மா தற்போதும் அப்படி ஒரு கருத்தைதான் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “ஒருவரையொருவர் விவகாரத்து செய்வதில் அமீர்கானுக்கோ கிரண் ராவுக்கோ பிரச்னை இல்லாதபோது மற்றவர்களுக்கு என்ன பிரச்னை என தெரியவில்லை. இதை கேலி செய்பவர்கள் எப்போதும்போல கேலி செய்துக்கொண்டே இருப்பார்கள். அது அவர்களின் வாடிக்கை. என்னைப்பொறுத்தவரை இந்த தம்பதியினர் மிகவும் கண்ணியமான முறையில் பிரிந்துள்ளார்கள். இருவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கை இனி மிகவும் வண்ணமயமாகும். விவகாரத்து கொண்டாடப்பட வேண்டும். திருமணங்கள் முட்டாள்தனம் காரணமாக நடக்கிறது. ஆனால் விவாகரத்து அப்படியல்ல” என பதிவிட்டுள்ளார்.
நீங்க படம் எடுத்து ஃபேமஸ் ஆனதை விட, சர்ச்சையில் சிக்கி ட்ரெண்டிங் ஆனது தாங்க அதிகம்.