சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

அடுத்த இறையை தேடியாச்சு.. கோலிவுட்டில் அறிமுகமாகும் பாலிவுட் மாஸ் ஹீரோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் நடிப்பில் அண்மையில் வெளியான வேட்டையன் திரைப்படம், ரசிகர்களிடம் எதிர்பார்த்தளவில் வரவேற்பைப் பெறவில்லை என்பது தான் உண்மை. படம் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் செகண்ட் ஹாஃபில் சொதப்பியுள்ளனர்.

தவிர, வழக்கமான ரஜினி படத்தின் டெம்ளேட்டை தகர்த்து, கதையை மட்டுமே மையமாக வைத்து இயக்குநர் இயக்கியதால், ரஜினி ரசிகர்களுக்கு சற்றி ஏமாற்றம் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வட இந்தியாவில் அமிதாப் பச்சனுக்காகவே இந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வேட்டையன் கலெக்ஷன் பற்றியெல்லாம் அதிகம் யோசிக்காமல், கூலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். அதேபோல், ரஜினியுடன் நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

மாஸ் காட்டுவாரா.. இல்லை இறையாகி போவாரா?

கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தாலும், படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது, வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், கூலி படத்திலும் ஒரு பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளார்.

அமீர்கான் கேமியோவாக நடிக்கவிருப்பதாகவும், அவரது காட்சிகளை சென்னையில் படமாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ரஜினி – ஆமிர்கான் காம்பினேஷன் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் அமீர்கான், தற்போது ரஜினியின் கூலி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

இது மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமீர் கான் படத்தில் மாஸ் காட்டுவாரா இல்லை இரையாகி போவாரா என்ற கேள்வியும் ஒரு சில நெட்டிசன்கள் மத்தியில் உள்ளது. ஏற்கனவே படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் பெரிய ஆட்களாக இருக்கும் நிலையில், தற்போது அமீர் கான் இணைந்திருப்பது, அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -spot_img

Trending News