ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு.. சினிமாவில் இருந்து விலக முடிவு பண்ண அமீர்கான்

இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அமீர் கான். தனது படங்களில் வித்தியாச முயற்சியை மேற்கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர். அமீர் கான் வித்தியாசமான கதைகளை தயாரிப்பதிலும் கவனம் செலுத்துபவர். அந்த வகையில், தற்போது சாய் பல்லவியை வைத்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘லால் சிங் சத்தா’ திரைப்படம், பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், தான் சினிமாவில் இருந்து விளக்கப்போவதாக இவர் அதிரடியாக கூற, அது ரசிகர்கள் திரைத்துறையினர் என பல பேரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு

அடுத்த 10 ஆண்டுகளே சினிமாவில் இருப்பேன். அந்த 10 வருடத்தில் ஏற்கனவே 6 படங்களுக்கு ஒப்பந்தமாகிவிட்டேன். அதன் பிறகு, நான் துறையிலிருந்து விலக போகிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இதற்கான காரணத்தை கேட்ட போது, அவர் சொன்ன காரணம் பலருக்கு வியப்பை கொடுத்துள்ளது.

அவர். “லால் சிங் சத்தா படத்தின் போதே ஓய்வு முடிவை எண்ணினேன். கொரோனா சமயத்தில் நான் ஒன்றை உணர்ந்தேன். 18 வயது தொடங்கி தற்போது வரை என்னுடைய இளமை காலம் முழுவதையும் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்திவிட்டேன்..”

” தனிப்பட்ட எனது குடும்ப வாழ்க்கைக்காக நேரம் செலவழிக்கவில்லை. எனது மனைவிகள் இருவருடனும் சரி, குழந்தைகளுடனும் சரி நேரம் செலவிட்டதே இல்லை. அவர்களுடன் நேரம் செலவிட விரும்பவும் இல்லை. ஏன் என்றால் எனக்கு சினிமாவில் சாதிப்பது, மக்களை மகிழ்விப்பது மட்டுமே இலக்காக இருந்தது.”

” ஆனால், அது தவறு என்று எனக்கு கொரோனா காலகட்டத்தில் தோன்றியது. என்னால் நேரம் செலவழிக்க முடியாத சூழலில் நான் திருமணம் செய்திருக்க கூடாது. அப்படி செய்தபின், அவர்களுக்கு என்று ஒன்றுமே செய்யவில்லை. நேரத்தை கூட செலவழிக்கவில்லை என்று யோசிக்கும்போது, ரொம்ப குற்ற உணர்ச்சியாக இருக்கிறது.”

“அதனால், இனி 10 வருட காலம் மட்டும் இருந்துவிட்டு, அதற்க்கு பிறகு, குடும்பத்துடன் மட்டுமே என் நேரத்தை முழுவதுமாக செலவிட போகிறேன்” என்று கூறியுள்ளார். இதற்க்கு பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்ததால், இப்படி ஒரு முடிவு வேண்டாம் என்றும் ஒரு சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment