திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பாவனியை நாமினேட் செய்த அமீர்.. காதல் ட்ராக்கில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பம்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி இன்னும் மூன்றே வாரத்தில் நிறைவடைய உள்ளதால், நேற்றைய நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே ரவுண்டு நடைபெற்றது. அத்துடன் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட் கொஞ்சம் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டது.

இவ்வளவு நாள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் பிறரை நாமினேட் செய்யும்போது, அதை ரகசியமாக வைத்துள்ளனர். ஆனால் இந்த முறை ஓபன் நாமினேஷன் செய்யப்பட்டது. பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வீட்டுக்குள் நுழைந்த அமீர், வந்த சில தினங்களில் பாவனிக்கு ரூட்டு போட்டு காதல் ட்ராக் ஓட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற ஃப்ரீஸ் டாஸ்கின் போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களின் உறவினர்கள் அமீர் -பாவனி குறித்து, தங்கள் கருத்துக்களை நாசூக்காக வெளிப்படுத்தினர். அத்துடன் அமீரிடம் பிக் பாஸ் விளையாட்டு விளையாடுவதில் மட்டும் கவனமாக இருங்கள் என்று அறிவுரை கூறினர்.

மேலும் அமீரும் அவர்கள் கூறியதை ஏற்றுக் கொண்டு, ‘வெளியில் வந்த பின்பு பாவனியை காதலிப்பதில் நேரம் செலவிடலாம்’ என்று பிக் பாஸ் விளையாட்டை தற்போதுதான் ஆடத் தொடங்கி உள்ளார். அதற்கு உதாரணமாக தற்போது நடைபெற்ற ஓபன் நாமினேஷனில் அமீர் பாவனியை நாமினேட் செய்துள்ளார்.

அதற்கு அவர் கூறிய காரணம் என்னவென்றால், பாவனியை காதலிப்பது போல் நடிப்பது ஒரு ஸ்டேட்டஜியாக இருக்கும் என ஒருசிலர் நினைப்பதால், அதை பாவனனியும் உணர்வதாக சந்தேகம் வந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விளையாடத்தான் வந்துள்ளேன் என்று அமீர் விளக்கமளித்தார்.

இவ்வாறு யாரும் சற்றும் எதிர்பாராத அமீரின் இந்த நடவடிக்கை நேற்றைய நிகழ்ச்சியில் அரங்கேறியது. இருப்பினும் பிக்பாஸ் சென்ற வாரம் போல் இந்த வாரமும் வீட்டில் உள்ள அனைவரையும் நாமினேட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News