செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

முறிந்து போன விஜய் டிவியின் காதல் ஜோடி.. ஓவரா போட்ட ஆட்டத்தால் செஞ்சி விட்ட காதலன்

Vijay TV: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனுக்கும், கண்டிப்பாக ஒவ்வொரு காதல் ஜோடி இருக்கும். இவர்கள் உண்மையில் காதலிக்கிறார்களா அல்லது அதன் மூலம் தங்களுடைய இருப்பை நிலை நிறுத்திக் கொள்கிறார்களா என்று இதுவரை புரியவில்லை. எப்படி பார்த்தாலும் அந்த வீட்டினுள் இருக்கும் வரைக்கும் உருகி உருகி காதலித்து விட்டு, பின்னர் வெளியே வந்ததும் அதைப் பற்றி எதுவுமே பேசாமல் எஸ்கேப் ஆகி விடுவார்கள்.

இப்படி பிக்பாஸில் ஆரம்பித்தது தான் அமீர் பாவனி காதல். அந்த வீட்டில் இருக்கும் வரை அமீர் பாவனியை ஒருதலையாக காதலித்து வந்தார். இந்த ஜோடிக்கு மக்களிடையே கொஞ்சம் ஹைப் இருக்கிறது என தெரிந்ததும், அடுத்து ஒரு நடன நிகழ்ச்சி யில் இருவரையும் ஜோடியாக ஆட வைத்து, இறுதியில் ஒரு எபிசோடில் பாவனி, அமீரின் காதலை ஒத்துக் கொள்வது போல் காட்டப்பட்டிருந்தது.

Also Read:ஹோம்லி நடிகையை பார்த்து ஜொள்ளு விட்ட நடிகர்.. மேலே கை வைத்ததால் செருப்பை தூக்கிய ஹீரோயின்

அதன் பின்னர் இவர்கள் இருவரும் காதல் ஜோடிகளாக இருக்கும் எல்லா மீடியாக்களிலும் பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதேபோன்று நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்திலும் இவர்களுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இருவரும் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து கொண்டிருப்பது கூட அதிகாரப்பூர்வமாக உறுதியானது. மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் அமீர் மற்றும் பாவனி லிவிங் ரிலேஷன் ஷிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் இருவரும் எப்போதுமே ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், ஊர் சுற்றுவது, ஒரே வீட்டில் இருப்பது போல் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்வது என கொஞ்சம் ஓவராகவே ஆடி வந்தார்கள். இவர்களிடம் திருமணத்தைப் பற்றி கேட்கும் பொழுது மட்டும் பாவனி எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அமீர் அது போன்ற கேள்விகளை தவிர்த்து வந்து கொண்டிருந்தார்.

Also Read:டான்ஸ் நடிகையை வேட்டையாடிய முன்னணி ஹீரோ.. பணத்தை சுருட்டிக்கொண்டு கழட்டி விட்ட சோகம்

இந்த நிலையில் தற்போது அமீர் மற்றும் பாவனி இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் பாவனி தான். அவருடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த அவர், ஒரு ரசிகர் நீங்கள் சிங்கிளா என கேட்டதற்கு ஆம் என பதில் அளித்து இருக்கிறார்.

                                                      வைரலாகும் பாவனியின் இன்ஸ்ட்டா பதிவு

Pavni reply
Pavni reply

இந்த பதில் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இருவரும் காதல் என்ற பெயரில் தங்களுடைய பெயர் மற்றும் புகழுக்காக ஒருவரை ஒருவர் பயன்படுத்திக் கொண்டார்கள் எனவும், அமீர் பாவனியை வைத்து தன்னுடைய சினிமா கேரியரை வளர்த்துக்கொண்டு தற்போது பாவனியை கழட்டி விட்டு விட்டார் எனவும் அடுக்கடுக்காக இவர்கள் காதல் பிரேக்கப் காண நெகட்டிவ் காரணங்களை ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Trending News