பிகில் படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் அமிர்தா ஐயர்.
தெனாலிராமன் என்ற படத்தில் அறிமுகமாகி லிங்கா, போக்கிரி ராஜா, தெறி, படைவீரன், காளி போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
அமிர்தா தற்போது பிக் பாஸ் மூலம் பிரபலமான கவினுடன் இணைந்து லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதை தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார் அமிர்தா ஐயர். அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்தார் அமிர்தா ஐயர்.
தற்போது முதல் முறையாக 30 நாட்களில் காதலிப்பது எப்படி.? என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகருடன் லிப் லாக் அடிக்கும் காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
