வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

14 கிலோ உடல் எடையை குறைத்த விஜய் டிவி பிரபலம் அமித்.. செம பிட் ஆயிட்டீங்க பாஸ்!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் அமித் பார்கவ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

அதிலும் இந்த சீரியல்கள் ரசிகர்களுக்கு பிடித்த போக அதன் பிறகு ஒரு சில படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழ் தாண்டி மற்றும் மொழியை சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் கன்னட மொழியில் பிரபல சீரியலில் இவர் ராமராக நடித்துள்ளார். இந்த மாதிரி பல்வேறு சீரியல்களில் பழமொழிகளும் நடித்து புகழ்பெற்றார் இவரது மனைவியான ஸ்ரீரஞ்சனி கலக்கப்போவது யாரு சீசன் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

amit bhargav
amit bhargav

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து சினிமா துறையில் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து வருகின்றனர். தற்போது அவர் சமூக வலைதளப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில் பல நாட்களாக உடற்பயிற்சி செய்ய அமைந்த நாள் சில நாட்களுக்கு முன்பு தான் உடற்பயிற்சி செய்ய முடிவெடுத்தேன் எனவும் தற்போது 14 கிலோ உடல் எடையை குறைத்து விட்டதாகவும் அவர் புகைப்படத்தை பதிவிட்டு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு ஆர்வமாக இருக்கும் எனவும் மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் எனவும் கூறி பதிவிட்டுள்ளார்.

Trending News