ஜெயிலரை காப்பாற்றிய அமிதாப்.. நன்றி பெருக்கில் அமிதாப்புடன் இணையும் ரஜினி.

Amitabh bachchan and rajinikanth on thalaivar170:ஜெயிலரின் வெற்றிக்குப் பின் தலைவர் லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்து உள்ள படம் தலைவர் 170. ஞானவேல் இயக்கத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன்,ராணா,பகத் பாசில், உஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.

33 ஆண்டுகள் கழித்து ஹிந்தியில் “ஹம்” என்ற படத்திற்கு பின் தலைவருடன் கைகோர்த்த அமிதாப்பச்சன் தனது நெகிழ்ச்சியான தருணங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நீண்ட கால ஸ்பான்சர் ஆன சஹாரா இந்திய பரிவார் நிறுவனத்தின் தலைவர் சுபேதா ராய் அவர்கள் இந்திய கிரிக்கெட் டீம்  மட்டுமல்ல சினிமா பிரபலங்கள் பல பேரையும் தன் பாக்கெட்டுக்குள் வைத்திருந்தார்.

Also Read:நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்த அமிதாப்பச்சன், ரஜினிகாந்த்.. இணையத்தில் வைரலாகும் குறும்படம்

ஆரம்ப காலங்களில் அமிதாப்பச்சனுக்கு ஏற்பட்ட கடுமையான நிதி சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு  80 மற்றும் 90களில்  இந்திய பணக்காரர்களில் ஒருவராக வந்த சுபேதா ராய்  ஒரு வித  மூர்க்கத்தனமான நிபந்தனையுடன் அவருக்கு உதவ முன் வந்தார்.

இந்த நிதி உதவிக்காக அமிதாப் அவர்கள், நான் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக படம் நடித்து தருகிறேன் என்று கதறிய நிலையில் இது எனக்கு தேவையில்லை என்றும் நான் எப்போதெல்லாம் மும்பை வருகிறேனோ அப்போதெல்லாம் மலர் கொத்து கொண்டு நீங்கள் என்னை வரவேற்க வேண்டும் என்று கூறி அமிதாப்பை விலைக்கு வாங்கினார்.

இதே போன்ற வலையை தமிழ்நாட்டில் ரஜினிக்கு விரித்தார். அதாவது சஹாராவின் அம்பாசிடராக ரஜினியை தேர்ந்தெடுத்து 100 கோடிக்கு மேல் கொடுப்பதாக மண்டையை கழுவினார்.

ரஜினி ஹிந்தியில் நடிக்க தொடங்கி இருந்த காலத்தில் இருந்தே அமிதாப் அவர்களுடன் நெருங்கிய நட்புடன் பழகி வந்தார். நட்பின் மிகுதியால் அமிதாப், ரஜினியிடம் சஹாராவின் நரி தந்திரத்தை விளக்கி கூறி ரஜினியை சுபேதாராயின் சூழ்ச்சியில் இருந்து காப்பாற்றினார்.

Also Read:ஜெயிலரை போல் வெற்றி கொடுக்க பாடுபடும் ரஜினி.. அமிதாப்பச்சன் தலைவருக்கு வச்ச செக்