ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சூர்யாவால் கதறிக் கதறி அழுத அமிதாப் பச்சன்.. இந்தியாவே கொண்டாடும் நாயகனாக மாறிய சூர்யா

பலவருட வெற்றிக்கு காத்திருந்த சூர்யாவுக்கு சூரரைப்போற்று என்ற மாபெரும் வெற்றிப் படம் உலக அளவில் அவரது பெருமையை கொண்டு சேர்த்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இந்த அளவுக்கு செல்லும் இடமெல்லாம் விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது.

சூர்யா என்னதான் மாஸ் படங்களில் நடித்தாலும் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும்போது மட்டும் அவரது படங்கள் தனித்துவமாக தெரிகின்றன. கடந்த சில வருடங்களில் அந்த மாதிரி படங்கள் தான் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.

அந்த வகையில் கேப்டன் ஜி ஆர் கோபிநாத் வாழ்க்கை வரலாறாக உருவாகியிருந்த சூரரைப்போற்று திரைப்படம் மொழி கடந்து அனைவரையும் கவர்ந்துள்ளது. சுதா கொங்கரா இயக்கியிருந்த இந்தப் படம் சூர்யாவின் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்.

சமீபத்தில் சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற கையிலே ஆகாசம் என்ற பாடலை பார்க்க பார்க்க கேட்க கேட்க கண்களில் நீர் வடிந்தது என அமிதாப் பச்சன் போட்ட பதிவு ஒன்று தற்போது காட்டுத்தீ போல் வைரல் ஆகிவிட்டது.

சைந்தவி குரலில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி இருந்த அந்த பாடலை வெகுவாக பாராட்டியுள்ளார் அமிதாப். இது சூரரைப்போற்று படத்தை மேலும் ஒருபடி உயர்த்தியது போல் உள்ளது.

சூர்யா இப்படி உலகமே கொண்டாடும் அளவுக்கு வெற்றிப்படம் கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்த ஏக்கத்தை சூரரைப்போற்று தணித்துள்ளது. இனி சூர்யாவின் அடுத்தடுத்த படங்களும் அவரது புகழ் பேசும் என எதிர்பார்க்கலாம்.

suriya-amithab-cinemapettai
suriya-amithab-cinemapettai

Trending News