Director Bharathiraja: மண் மணம் வீசும் கிராமத்து கதை தழுவிய படங்களை இயக்கி வெற்றி சாதனை படைத்த மாபெரும் இயக்குனர் தான் பாரதிராஜா. இருப்பினும் இவர் செய்த காரியத்தால் கடைசி வரை ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பினை பெறாத நடிகை பற்றிய தகவலை இத்தொகுப்பில் காண்போம்.
16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானவர் பாரதிராஜா. இவரின் முதல் படமே வெற்றி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இவர் மேற்கொண்ட திரில்லர் படங்களான சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், டிக் டிக் டிக் போன்றவையும் நல்ல வரவேற்பை பெற்றது.
அவ்வாறு இவர் இயக்கத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் பலர் புகழின் உச்சத்தை அடைந்தார்கள் என்றால் அது மிகையாகாது. தமிழ் சினிமா துறையில் இயக்கத்தில் பல மாற்றங்களை உருவாக்கியவரும் இவர்தான் என்ற பேச்சும் இருந்து வருகிறது.
ஆனால் பழம்பெரும் நடிகையான காந்திமதி மட்டும் இவரின் இயக்கத்தில் இடம் பெற்றும் கடைசிவரை ஹீரோயின் ஆகாமலே இருந்து வந்ததாகவும், அந்த ஏக்கத்தை பல இடங்களில் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஆம் இவரின் முதல் இயக்கமான 16 வயதிலே படத்தில் குருவம்மா என்னும் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் தான் காந்திமதி.
அறிமுக நாயகியான இவர் இப்படத்தில் மேற்கொண்ட அம்மா கேரக்டர் தான் இவரின் இத்தகைய ஏக்கத்திற்கு காரணமாம். அவ்வாறு நடிக்க வந்த பிறவியிலேயே அம்மா வேஷம் கொடுத்ததால் அதைத் தொடர்ந்து அம்மா, அண்ணி, அக்கா என பல கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இதனால்தான் என்னவோ கடைசி வரை ஹீரோயின் ஆகும் வாய்ப்பினை நான் பெறவில்லை எனவும் மனம் உருகி தெரிவித்திருக்கிறார் காந்திமதி. அதிலும் 16 வயதினிலே படத்தில் அந்த குருவம்மா கேரக்டர் ஏற்கும்போது இவரின் வயது 25ம். பல திறமைகள் இருந்தும் தனக்கு கிடைக்கும் வாய்ப்பினை தக்க வைத்து துணை கதாபாத்திரங்களில் பெயர் எடுத்த இவர் ஹீரோயின் ஆகும் வாய்ப்பினை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.