சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பாண்டியனின் மருமகள்கள் செய்த காரியத்தால் சிக்கப்போகும் அம்மாச்சி.. விபரீதமாக முடிவை எடுத்த ராஜி குடும்பம்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிரை பார்த்து பேச வேண்டும் என்று கோமதி அம்மா வீட்டில் இருந்து தவிக்கிறார். அப்பொழுது அங்கே வந்த பழனிச்சாமி, பேரனை பார்த்து பேச வேண்டும் என்றால் வெளியே வா, உன் மகளை கூப்பிடு கதிரை பற்றி விசாரித்து பேசு என்று சொல்கிறார். உடனே ராஜி அம்மா அதெல்லாம் வேண்டாம் தேவையில்லாமல் உங்க அண்ணனுக்கு தெரிந்தால் பிரச்சினையாகும் என்று தடுக்கிறார்.

இருந்தாலும் கோமதியின் அம்மா, நான் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என் பேரனை பார்த்து பேச வேண்டும் என்று சொல்லி கோமதி வீட்டு வாசலுக்கு வந்து விடுகிறார். பின்னாடியே ராஜியின் அம்மா, சித்தி மற்றும் பழனிச்சாமி நிற்கிறார்கள். அப்பொழுது கோமதியை கூப்பிடுவதற்கு அம்மாச்சி தயக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் ஆஃபீஸ் முடிச்சுட்டு வரும் மீனா, இவர்களை பார்த்து என்ன ஆச்சு ஏன் எல்லாரும் எங்க வீட்டு வாசலில் நின்னு உள்ளே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு பழனிச்சாமி, எங்க அம்மாக்கு கதிரை பார்த்து பேச வேண்டும் என்ற ஆசை. ஆனால் எப்படி கூப்பிடுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் என சொல்கிறார்.

உடனே மீனா அப்படி என்றால் நேரடியாக உள்ள வந்து பேசுங்க என கூப்பிடுகிறார். உடனே பயந்து போன கோமதி அம்மா, கோமதி என்று மகளை கூப்பிட ஆரம்பித்து விட்டார். அம்மாவின் சத்தத்தை கேட்டு கோமதி உள்ளே இருந்து சந்தோஷத்தில் ஓடி வந்து வெளியே பார்க்கிறார். பின்னாடியே ராஜி, தங்கமயில் வந்து விடுகிறார்கள். அப்பொழுது அம்மாச்சி கதிர் எப்படி இருக்கிறான்.

உடம்பு சரி ஆயிடுச்சா என்று கேட்கிறார், அதற்கு கோமதி ரொம்ப தான் பேரன் மேல பாசமா? பிரச்சினை நடந்து இவ்ளோ நாள் ஆகிடுச்சு, நீ ஏன் கேட்கவே இல்லை பார்க்கணும் தோணலையா என்று கேட்கிறார். பார்க்கணும்னு ஆசை தான் ஆனால் உங்க அண்ணன்களை பற்றி தெரியும்ல்ல? தேவையில்லாத பிரச்சனையை இழுத்து எல்லாருடைய நிம்மதியும் கெடுத்து விடுவார்கள்.

இப்பொழுது அதைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் கதிரை கூப்பிடு நான் பார்த்து பேச வேண்டும் என்று அம்மாச்சி சொல்கிறார். உடனே ராஜி, தங்கமயில் மற்றும் மீனா அப்படி என்றால் நீங்கள் உள்ளே வாங்க என்று அம்மாச்சி கையை பிடித்து கூட்டிட்டு போய் விடுகிறார். உள்ளே போனதும் அரசியும் அம்மாச்சி என்று பாசத்தை கொட்ட ஆரம்பித்து விட்டார்.

பிறகு கதிரும் வந்து அம்மாசியை பார்த்து ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் பாண்டியன் வந்தால் கூட பெரிய பிரச்சினையாகாது. அதற்கு பதிலாக சக்திவேல் மற்றும் முத்துவேல் வந்து விடுவார்கள். அம்மாச்சி இங்கே தான் இருக்கிறார் என்று தெரிந்தால் இதை வைத்தே பிரச்சினை பண்ணி விடுவார்கள். இதுதான் சான்ஸ் என்று சக்திவேல் இனி இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று விபரீதமாக முடிவை எடுத்து கோமதி உடனே அம்மாச்சி தங்க வைப்பதற்கு முடிவெடுத்து விடுவார்.

- Advertisement -

Trending News