தமிழ் கலாச்சாரத்தை மையப்படுத்தி அம்மன் படங்களை வைத்து வெற்றி கண்ட இயக்குனர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் தற்போது மாபெரும் வெற்றி கொடுத்த படங்களின் வரிசையை பார்க்கலாம்.
அம்மன்: கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணா, ரமி ரெட்டி போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1995ல் வெளிவந்த படம் அம்மன். சௌந்தர்யாவின் குடும்பத்தை கொடுமைப்படுத்தும் அரக்கனை அம்மன் துணையோடு எப்படி கொள்கிறார் என்பது தான் கதை. இதில் வரும் ரமி ரெட்டி வில்லன் கதாபாத்திரம் மிகக் கொடூரமாக இருக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்தது.
ராஜகாளியம்மன்: ராம நாராயணன் இயக்கத்தில் கர்ணன், ரம்யா கிருஷ்ணன், கௌசல்யா, நிழல்கள் ரவி, வடிவேலு போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2000-ல் வெளிவந்த படம் ராஜகாளியம்மன். தன் வாழ்க்கையில் சாத்தானால் நடக்கும் போராட்டத்தில் இருந்து மீண்டு வருவார் கௌசல்யா, இந்த படம் ரசிகர் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி: இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், ராம்கி, சங்கவி, பானுப்பிரியா போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2001-ல் வெளிவந்த படம் ஸ்ரீராஜராஜேஸ்வரி. இப்படத்திற்கு தேவா இசையமைத்து இருப்பார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் குற்றாலம் அருகே உள்ள தென்காசியில் படமாக்கப்பட்டது, 100 நாட்களை தாண்டி ஓடியதால் மக்களிடையே சூப்பர் ஹிட்டான படம்.
பாளையத்தம்மன்: மீண்டும் ராம நாராயணன் இயக்கத்தில் மீனா, ராம்கி, செந்தில், திவ்யா போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2000-ல் வெளிவந்த படம் பாளையத்தம்மன். ஒரு சாத்தானை எப்படி அழிப்பது போன்றம், அதற்காக தெய்வபக்தியால் போராடி அழித்து தன் குடும்பத்தை காப்பாற்றுவது போன்ற கதை அமைக்கப்பட்டிருக்கும். அந்த குழந்தையை சாத்தானிடம் காப்பாற்றி ராம்கியிடம் கொடுப்பது போன்று கதை அமைக்கப் பட்டிருக்கும், கிராமத்து மக்களிடம் சென்றடைந்து மாபெரும் வெற்றி பெற்றது.