ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

எலிமினேட் ஆன போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்கிய ஆனந்தி.. லட்சக்கணக்கில் பணத்தை வாரி கொடுத்த பிக் பாஸ்

Bigg boss Tamil 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 9 வாரங்களை கடந்து பத்தாவது வாரத்தில் எலிமினேட் ஆகி போவதற்கு நாமினேஷனுக்கு போட்டியாளர்கள் தேர்வாகிவிட்டார்கள். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷனுக்கு தேர்வான போட்டியாளர்கள் யார் என்றால் ஜாக்லின், பவித்ரா, அருண், சௌந்தர்யா, விஷால், தர்ஷிகா, சத்தியா, அன்சிதா, ரயான்.

இதன் அடிப்படையில் இந்த வாரம் தர்ஷிகா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விடுவார். மேலும் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் என்றால் சத்தியாவும் வெளியேற வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் நடந்து முடிந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு விஜய் சேதுபதி மக்கள் குரலுக்கு ஏற்ற மாதிரி கோவா கேங்கை வெளுத்து வாங்கி விட்டார்.

அத்துடன் அருணின் ஆணவத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக வச்சு செய்து விட்டார். இதனால் இன்றைய எபிசோடில் அருணை மொத்த டீமும் எதிர்த்து பேசி ஒன்னும் இல்லாமல் ஆக்குவதற்கு ஒன்று கூடி விட்டார்கள். மேலும் கடந்த வாரத்தில் எலிமினேட் ஆகி போன சாச்சுனா மற்றும் ஆனந்தியின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் எலிமினேட் ஆகிப்போன போட்டியாளர்களில் அதிகமான சம்பளத்தை பெற்றிருப்பது ஆனந்தி தான். ஒரு எபிசோடுக்கு 25 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டதால் மொத்தம் 63 நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்ததால் கிட்டத்தட்ட 16 லட்சம் கிடைத்திருக்கிறது. அத்துடன் சச்சனாவிற்கு ஒரு எபிசோடுக்கு 20,000 சம்பளம் கிடைத்து இருக்கிறது. மொத்தமாக சச்சனா 11 லட்ச ரூபாய் சம்பாதித்து இருக்கிறார்.

- Advertisement -

Trending News