செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய் சேதுபதி பட மகளுக்கு டார்ச்சர் கொடுத்த ஸ்டார் ஹீரோவின் மகன்.. வெட்ட வெளிச்சமான உண்மை

Actor VijaySethupathi: நடிகர் விஜய் சேதுபதி இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக இருக்கிறார். வருடத்திற்கு எப்படியும் 10 முதல் 15 படங்களில் நடித்து விடுகிறார். இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி படத்தில் மகளாக நடித்த ஹீரோயின் ஒருவருக்கு ஸ்டார் ஹீரோவின் மகன் டார்ச்சர் கொடுப்பதாக தகவல் வெளியானது. இந்த பிரச்சனை இணையத்தில் வேகம் எடுக்கவே நடிகை வெட்ட வெளிச்சம் ஆகவே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டு இருக்கிறார்.

Also Read : சூப்பர் ஹிட் இயக்குனரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லைக்கா.. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்கும் விஜய் சேதுபதி

அதாவது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி ஷெட்டி. இவர் தமிழில் விஜய் சேதுபதியின் உபென்னா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இதைத்தொடர்ந்து நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கஸ்டடி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

மேலும் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த வணங்கான் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வந்த நிலையில் சூர்யா விலகிய பிறகு இவரும் சேர்ந்து விலகி விட்டார். இப்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாக உள்ள ஜீனி படத்தில் மூன்று கதாநாயகிகளில் கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

Also Read : ஹீரோவைவிட வில்லன்களை பெரிதும் பேசப்பட்ட 5 படங்கள்.. கடைசி வரை நின்று அடித்த விஜய் சேதுபதி

இந்நிலையில் சில மாதங்களாகவே கீர்த்தி ஷெட்டியை மிகப்பெரிய ஸ்டார் ஹீரோவின் மகன் ஒருவர் டார்ச்சர் செய்து வருவதாக தகவல் வெளியானது. அதுவும் கீர்த்தி ஷெட்டி எங்கு சென்றாலும் அவரும் பின் தொடர்ந்து செல்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. இதுவரை மௌனம் காத்து வந்த கீர்த்தி ஷெட்டி இப்போது இதற்காக ஒரு பதிவு போட்டு இருக்கிறார்.

அதாவது எந்த ஆதாரம் இல்லாத விஷயத்தையும் தயவுசெய்து யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு மட்டுமின்றி இது முழுக்க முழுக்க வதந்தியே என்பதை கீர்த்தி ஷெட்டி தெரிவித்து இருக்கிறார். ஆரம்பத்திலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இப்போது விஷயம் பூதாகரமாக வெடித்த பின்பு கீர்த்தி ஷெட்டி இந்த பதிவை போட்டிருக்கிறார்.

krithi-shetty
krithi-shetty

Also Read : செலிபிரிட்டி கிரஸ்னா இவர் மேல தான்.. வெட்கத்துடன் சொன்ன கீர்த்தி ஷெட்டி

Trending News