Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், சமீப கொஞ்ச நாளாக தேவையில்லாத கேரக்டராக உள்ளே நுழைந்து சீரியலை பாழாக்கியது அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ். இறந்து போனவர் மறுபடியும் உயிருடன் வந்து அமிர்தாவை தேடி அலையும் கேடுகெட்ட சீரியல். அதுவும் ஆரம்பத்தில் அமிர்தாவை காட்டும் பொழுது அவருடைய கணவர் இறந்து போன சூழ்நிலை காட்டப்பட்டு இருக்கும்.
அமிர்தாவை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கணேஷ் அவருடைய அப்பா அம்மாவிடம் கையைப் பிடித்துக் கொடுத்து இறந்து போயிருப்பார். அப்படி இருக்கும்போது சீரியலில் கதை இல்லை என்றதும் லாஜிக்கே இல்லாத ஒரு விஷயத்தை கொண்டு வந்து இத்தனை நாளாக உருட்டுவதற்கு பேசாமல் இந்த நாடகத்திற்கு ஒரு எண்டு கார்டை போட்டு இருக்கலாம்.
சரி உயிரோடு வந்த பிறகாவது அமிர்தா இன்னொரு கல்யாணம் பண்ணி லைஃப்ல செட்டில் ஆகிவிட்டார் என்று தெரிந்தும் பாலோ பண்ணி வந்தது எரிச்சலாக இருந்தது. தற்போது அமிர்தா முன்னாடி கணேஷ் போயிட்டு நான் சாகல உயிரோடுதான் இருக்கிறேன். நாம் சந்தோஷத்துடன் வாழலாம் என்று கூப்பிடுகிறார். ஆனால் இது எதுவுமே புரியாத அமிர்தா அப்படியே நிலைகுலைந்து போய் நிற்கிறார்.
Also read: தெருத்தெருவாக போய் ஓட்டு கேட்கும் எதிர்நீச்சல் டீம்.. நாடாளுமன்றத் தேர்தலை மிஞ்சும் பரிதாபம்
அதன் பின் கணேசனின் அப்பா அம்மா எல்லா விஷயத்தையும் எடுத்து சொல்கிறார்கள். இதனால் என்ன செய்வது என்று புரியாத புதிராக எழில் மற்றும் அமிர்தா முழிக்கிறார்கள். தற்போது அமிர்தாவின் நிலைமை இரண்டு புருஷனிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் மாதிரியாக அமைந்துவிட்டது. இதற்கிடையில் கணேசனை பற்றி பாக்கியா, குடும்பத்தில் இருப்பவரிடம் சொல்லி விடுகிறார்.
இதை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்கள். ஆனால் பாக்யாவின் மாமியார் மட்டும் எழுந்து எல்லா தப்புக்கும் நீ தான் காரணம் என்று வழக்கம்போல் பாக்கியா மீது பழியை போடுகிறார். உடனே பாக்கியா, நானும் இதை எப்படியாவது உங்க கிட்ட சொல்லணும்னு நினைச்சேன் ஆனா முடியாம போயிருச்சு. தப்புதான் என்ன மன்னிச்சிடுங்க என்று சொல்கிறார்.
ஆனால் பாக்கியாவின் மாமியார் நான் அதை சொல்லல, ஆரம்பத்திலேயே எழிலுக்கு அமிர்தா வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன் நீ கேட்டியா என்று மொத்த பழியையும் பாக்கியா மீது போட்டுவிட்டார். இதையெல்லாம் தாண்டி அமிர்தா எடுக்கப் போகும் முடிவு என்னவாக இருக்கப் போகிறது. கணேசனின் சைக்கோதனமான கேரக்டருக்கு எப்பொழுது தான் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
Also read: பணக்கார மருமகளுக்கு சேவகம் பார்க்கும் விஜயா.. வேலைக்காரியாக மாறிய மீனா, ரோகிணி எடுத்த முடிவு