வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எழில் வாழ்க்கையில் வெடிக்க போகும் பூகம்பம்.. பக்காவாக பிளான் போடும் அமிர்தாவின் எக்ஸ் புருஷன்

Baakiyalakshmi Serial : விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. இத்தொடரில் ராஜீயின் திருமணத்தை முடித்துவிட்டு பாக்யா தனது வீட்டுக்கு வருகிறார். அப்போது வாசலிலேயே தடுத்து நிறுத்தி ஈஸ்வரி பாக்யாவிடம் எங்கு சென்று வருகிறாய் என கேள்வி கேட்கிறார்.

இதைதொடர்ந்து பாக்யா திருச்செந்தூர் சென்றதாக பொய் சொல்கிறார். ராஜீக்கு திருமணத்தை செய்து வைத்தது தவறு என ஈஸ்வரி, ராமமூர்த்தி, கோபி மற்றும் ராதிகா ஆகியோர் பாக்யாவிடம் வாதாடுகின்றனர். நான் செய்தது தவறுதான் என்று சொல்லிவிட்டு எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து செல்கிறார்.

இந்நிலையில் எழில் பாக்யாவிடம் உன் பக்கத்து நியாயத்தை சொல்லுவேன்னு நினைச்சேன் என்று கூறுகிறார். மேலும் அருகில் இருந்த இனியா தனது கல்லூரியில் அம்மா செய்ததை எல்லோரும் பாராட்டினார்கள் என்று கூறி பெருமைப்படுகிறார். இதையெடுத்து இனியாவிடம் நீ இதுபோன்ற தவறு எதுவும் செய்யக்கூடாது என்று பாக்யா கூறுகிறார்.

Also Read : கடுப்பில் போனை கட் செய்த ஹீரோ.. விரத்தியில் கிரஷ் நடிகை

மேலும் கணேஷ் அம்மா பாக்யாவுக்கு போன் செய்து தனது கணவர் உடல்நிலை மோசமாக இருக்கிறார் என்று கூறுகிறார். அதோடு அமிர்தா மற்றும் நிலா ஆகியோரை பார்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார், தயவு செய்து அனுப்பி வையுங்கள் என்று கேட்கிறார். இதுகுறித்து பாக்யா தனது குடும்பத்திடம் பேசிய நிலையில் யாரும் அமிர்தாவை அனுப்ப அனுமதிக்கவில்லை.

மீண்டும் பாக்யாவுக்கு கணேஷ் அம்மா போன் செய்யும்போது அமிர்தாவை அனுப்ப முடியாது என்று கூறுகிறார். தயவு செய்து அனுப்புங்கள் கணேஷ் அப்பா உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கதறி அழுகிறார். இதனால் அமிர்தா மற்றும் எழில் ஆகியோர் அங்கு போக முடிவு செய்கிறார்கள். ஆனால் இது எல்லாமே கணேஷ் போட்டிருக்கும் பிளான். அமிர்தாவை இங்கு வரவைத்து எழிலிடம் இருந்து பிரிக்க திட்டம் போட்டிருக்கிறார். ஆகையால் இனி பாக்கியலட்சுமி தொடரில் பல பூகம்பம் வெடிக்க வாய்ப்பு இருக்கிறது.

Also Read : பொட்டி பாம்பாய் அடங்கிய ஹீரோ.. காரியத்தை சாதித்துக் கொண்ட மனைவி

Trending News