வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அமிர்தா காலில் விழுந்த எழில்.. பாக்கியலட்சுமியால் 2ம் திருமணத்தில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை அமிர்தா மீது உயிராக இருந்த எழில் என்னுடைய வீட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்.

இதற்கான நிச்சயதார்த்த ஏற்பாடும் நடந்துள்ளது. ஆனால் பாக்யாவிற்கு எழில் முழு சம்மதத்துடன் இந்த திருமணத்தை ஒத்துக்கொள்ளவில்லை என்ற சந்தேகம் உள்ளது. இதை பலமுறை எழிலிடம் கேட்டாலும் ஏதோ சொல்லி சமாளித்து வருகிறார். இப்போது நிச்சயதார்த்தத்திற்கு அமிர்தாவும் வருகிறார்.

Also Read : கண்ணம்மா உனக்கு எண்டே இல்லையா.. மீண்டும் புதிய பாரதியுடன் தொடங்கிய 2ம் பாகம்

அங்கு எழிலை பார்த்து அதிர்ச்சியான அமிர்தா கண்ணீருடன் வெளியே வருகிறார். அப்போது எழில் அமிர்தாவிடம் உங்களை திருமணம் செய்து கொள்ள தான் எனக்கு விருப்பம். ஆனால் என்னுடைய குடும்பம் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

வர்ஷினியை கல்யாணம் செய்தால் தான் என்னுடைய வீட்டைக் காப்பாற்ற முடியும் என்று சொல்லி எழில் அமிர்தாவின் காலில் விழுகிறார். இதை தூரத்தில் இருந்து பாக்யா மற்றும் ஜெனி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அமிர்தாவும் இந்த கல்யாணத்திற்கு வேறு வழி இன்றி சம்மதிக்க உள்ளார்.

Also Read : காந்தாரா படத்தையும் விட்டு வைக்காத விஜய் டிவி.. இதெல்லாம் ஒரு பொழப்பு, ராஜா ராணி 2 வில் நடக்கும் அட்டூழியம்

ஆனால் பாக்யா தற்போது எழிலின் மனதில் அமிர்தா தான் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டதால் கண்டிப்பாக இந்த கல்யாணத்தை நிறுத்துவார். மேலும் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் இருக்கும் அமிர்தாவுக்கு தனது மகன் எழிலை இரண்டாம் கல்யாணம் செய்து வைக்க உள்ளார்.

ஏற்கனவே தந்தையின் வற்புறுத்தலின் காரணமாக விருப்பமில்லாமல் பாக்யாவை கோபி திருமணம் செய்து கொண்டதனால் தான் இவர்களுடைய வாழ்க்கை தற்போது தலைகீழாக மாறி உள்ளது. ஆகையால் தனது மகனுக்கும் இதே நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என பல முயற்சிகள் செய்து பாக்கியா எழிலுடன் அமிர்தாவை சேர்த்து வைக்க உள்ளார்.

Also Read : காந்தாரா படத்தையும் விட்டு வைக்காத விஜய் டிவி.. இதெல்லாம் ஒரு பொழப்பு, ராஜா ராணி 2 வில் நடக்கும் அட்டூழியம்

Trending News