வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கடைசி வாரத்தில் துரத்தி விடப்பட்ட போட்டியாளர்.. சாதுரியமாக காய் நகர்த்திய அமுதவாணன்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வருகின்ற ஞாயிறு அன்று முடிவுக்கு வர இருக்கிறது. ஆரம்பத்தில் மிகவும் சுறுசுறுப்பாக தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து சண்டை, சச்சரவு என ரசிகர்களுக்கே வெறுப்படையும் அளவுக்கு பூதாகர பிரச்சனை வெடித்து வந்தது.

இப்போது ஒரு வழியாக நூறு நாட்களைக் கடந்துள்ளது. கடைசி வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் எல்லோரும் மீண்டும் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதனால் இறுதிப் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் நம்மை எப்படி வெளியில் பார்க்கிறார்கள் என்ற ஒரு கணிப்பு இவர்கள் மூலம் தற்போது வந்துள்ளது.

Also Read : தளபதியுடன் ரத்த சொந்தமாக போகும் பிக் பாஸ் பிரபலம்.. வாயை பிளக்க வைத்த அசுர வளர்ச்சி

இந்நிலையில் பிக் பாஸில் பணம் மூட்டையை கதிரவன் பெற்ற நிலையில் 10 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்கள் காத்திருக்கும் வகையில் பணத்தின் மதிப்பு ஒவ்வொரு முறையும் அதிகரிக்கும். அந்த வகையில் 13 லட்சத்துடன் அமுதவாணன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

ஆகையால் மீதம் உள்ள போட்டியாளர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் பட்டத்தை அடிப்பார். அவருக்கு 50 லட்சம் ரொக்க பணம் கொடுக்கப்படும். இரண்டாவது இடத்தை பிடித்தவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படும். மற்றபடி அடுத்த இருவருக்கும் பிக் பாஸ் சம்பள மட்டும் தான் கொடுக்கப்படும்.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் இவர்தான்.. அசீமை வீழ்த்த கடுமையாக போராடும் போட்டியாளர்

இப்போது இறுதியில் விக்ரமன், அசீம், ஷிவின் மற்றும் மைனா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இதில் அசீம் மற்றும் மைனா நந்தினி இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்களில் நடித்தவர்கள். ஆனாலும் நந்தினி நாளை பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே துரத்தப்பட இருக்கிறார்.

விஜய் டிவியிலேயே இத்தனை வருடங்கள் பயணித்தாலும் பிக் பாஸ் இறுதி மேடையில் அவரால் வர முடியவில்லை. மைனா நந்தினி யோசித்த ஒரு கணத்தில் அமுதவாணன் சாதூரியமாக பணப்பெட்டியை எடுத்துள்ளதால் இப்போது அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Also Read : பண மூட்ட கதிருக்கு பணப்பெட்டி யாருக்கு? மீண்டும் காசு மழை கொட்டும் பிக் பாஸ் வீடு

Trending News