Suriya: சூர்யா கங்குவா படத்தில் வருட கணக்கில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதற்கு முன்பாகவே சுதா கொங்கராவுடன் இவர் இணையும் புறநானூறு அறிவிப்பு வெளிவந்தது. அதேபோல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 பட அறிவிப்பும் வெளிவந்தது.
இதில் சிறு கருத்து வேறுபாடு காரணமாக புறநானூறு படப்பிடிப்பு தள்ளி போயிருக்கிறது. அதனால் சூர்யா 44 பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூன் முதல் வாரத்தில் இதன் சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
Suriya
Vijayakumar
Karthik Subbaraj
Shruthi Siva
இந்நிலையில் இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லன் யார் என்ற தகவல் கசிந்துள்ளது. அதன்படி உரியடி மூலம் புகழ்பெற்ற விஜயகுமார் தான் இதில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.
சூர்யாவுக்கு வில்லனான விஜயகுமார்
நிச்சயம் இது ரசிகர்களுக்கு மிகப்பெரும் இன்ப அதிர்ச்சி தான். ஏனென்றால் விஜயகுமார் பார்ப்பதற்கு அமுல் பேபி போன்று பால் வடியும் முகமாக இருப்பார். அப்படிப்பட்டவர் வில்லன் கதாபாத்திரத்திற்கு எப்படி பொருந்துவார் என்ற ஆச்சரியம் அனைவருக்குமே உள்ளது.
Kanguva
Suriya 44
Vaadivaasal
Election
ஆனால் கார்த்திக் சுப்பராஜ் கதையை சொன்னதுமே அவருக்கு ரொம்பவும் பிடித்து விட்டதாம். அதனாலயே சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க அவர் சந்தோஷமாக சம்மதித்திருக்கிறார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் உருவான எலக்சன் வெளிவந்திருந்தது.
அதன்படி சூர்யா 44 புதிய தகவலாக இருக்கும் நிலையில் அவருடைய வாடிவாசல் என்ன ஆனது என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஏனென்றால் தனுஷ் இதில் நடிப்பதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த வாய்ப்பை சூர்யா விடமாட்டார் என்றும் நிச்சயம் வாடிவாசல் தொடங்கும் என்றும் கூறுகின்றனர். ஆக மொத்தம் கடந்த இரண்டு வருடங்களாக அவர் படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் இனி அடுத்தடுத்து சர்ப்ரைஸ் தான்.
கங்குவாவுக்கு பிறகு பிஸியாகும் சூர்யா
- சூர்யாவுடன் ஜோடி போடும் 6 அடி விஜய் பட நடிகை
- விஜய்க்கு போட்டியாக அரசியல் வியூகம் எடுக்கும் சூர்யா
- சூர்யா போட்ட இந்த லேடி டிரஸ் யாருடையது தெரியுமா.?