வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

தமிழின துரோகிகளுக்கு பல நூறு கோடி வாரி வழங்கும் அமுல்.. T20 கிரிக்கெட், வழுக்கும் கண்டனம்

Amul company: இந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் இலங்கை அணி டி பிரிவில் இருக்கிறது. இலங்கையுடன் வங்கதேசம், நேபால், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுடன் மோத போகிறார்கள். இதில் இலங்கை அணி முதல் போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு எதிராக ஜூன் மூன்றாம் தேதியும், எட்டாம் தேதி வங்காதேசத்திற்கு எதிராக விளையாடி முடித்து விட்டது.

இதனைத் தொடர்ந்து வருகிற 12ஆம் தேதி நேபாலுக்கு எதிராகவும், ஜூன் 17ஆம் தேதி நெதர்லாந்துக்கு எதிராகவும் இலங்கை அணி விளையாடப் போகிறார்கள். மேலும் இலங்கை கிரிக்கெட் டீமுக்கு ஸ்பான்சர் பண்ணுவது அமுல் நிறுவனம். அதை அமுல் நிறுவனம், ஸ்ரீலங்கா ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் என்பதே அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார்கள்.

ஆனால் அங்கே தமிழர்கள் எந்த அளவுக்கு சித்ரவதைப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்பதை நாம் யாரும் மறந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட அங்கே கிரிக்கெட் விளையாடும் அணிகளுக்கு பல நூறு கோடி வாரி வழங்கி ஸ்பான்சர் பண்ணியது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஸ்பான்சர் பண்ணுவது ரொம்பவே பெருமிதமாக இருக்கிறது என்று கூறியிருப்பது அவர்களுக்கு துணை போவதாக தெரிகிறது.

amul
amul

அதனால் இதற்கு சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும் என்றால் அமுல் நிறுவனத்தை நாம் புறக்கணிக்க வேண்டும். அவர்களின் எந்த பொருட்களையும் வாங்காமல் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தி நாம் யார் என்று ஒரு பாடம் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தமிழ்நாட்டின் தேசிய சிந்தனையாளர் மற்றும் தெளிவான வாசகராக இருக்கும் பாரி சாலன் டுவிட் போட்டிருக்கிறார்.

இவர் இப்படி கூறியதற்கான காரணம் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை இங்கே ஆட்சியில் இருந்த திமுக மற்றும் அவர்களுடைய அமைச்சர்கள் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருந்தார்கள். அந்த சமயத்தில் தமிழர்களின் சித்திரவதை செய்து கொன்றதை எதிர்த்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தொடர்ந்து பல உயிர்கள் பறிபோனது. இதனால் அவர்களுக்கு எதிராக இங்கிருந்து எந்தவித எதிர்ப்பு குரலும் கொடுக்காத நிலையில் இதையெல்லாம் தட்டி கேட்கும் விதமாக தற்போது வரை சீமான் அவருடைய குரலை எழுப்பிக் கொண்டு வருகிறார்.

அப்படிப்பட்ட தமிழின துரோகிகளுக்கு அமுல் நிறுவனம் பல நூறு கோடி பணத்தை வாரி இறைத்து அவர்களுக்கு துணை நிற்கிறது. இதனால் அவர்களுக்கு தக்க பாடத்தை கற்பிக்க வேண்டும்.

- Advertisement -

Trending News