வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பெரிய வள்ளல்களை மிஞ்சிய வளரும் சின்னதம்பி.. ராகவா லாரன்ஸ் வழியில் வந்த புது சிஷ்யன்

Actor Lawernce: பொதுவாக உதவி என்று எடுத்துக் கொண்டாலே உடனே ஞாபகத்திற்கு வருவது பாரி தான். முல்லைக்குத் தேர் கொடுத்தார் பாரி என்ற வரலாறும் இருக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இதுபோன்று யார் உதவி செய்துள்ளார்கள் என்று பார்த்தால் எம்ஜிஆர், விஜயகாந்த் போன்ற பிரபலங்கள் ஏழைகளுக்கு நிறைய உதவி செய்துள்ளனர்.

இப்போது உள்ள காலகட்டத்தில் நடன இயக்குனர் மற்றும் நடிகருமான லாரன்ஸ் எடுத்துக்காட்டாக வைத்துக் கொள்ளலாம். கஷ்டம் என்று வந்தால் ஓடி சென்று உதவி செய்து வருகிறார். அதேபோல் நிறைய குழந்தைகளுக்கு படிப்பு செலவையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Also Read : சுந்தர் சி, லாரன்ஸ் கூட ஜோடி போட்டு சோலியை முடித்த 5 நடிகைகள்.. ஆடையை குறைத்தும் வாய்ப்பு இல்லாத பரிதாபம்

மேலும் இப்போது நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் நல்ல சம்பாத்தியம் இருக்கிறதாம். இதனால் யாரும் நன்கொடை தர வேண்டாம், தனது சொந்த பணத்திலேயே உதவி செய்யும் அளவுக்கு இப்போது வசதி உள்ளதாக லாரன்ஸ் கூறியிருந்தார். ராகவா லாரன்ஸ் வழியில் ஒரு சின்ன தம்பி உதவி செய்து கொண்டிருக்கிறார்.

அவர் வேறு யாரும் இல்லை விஜய் டிவியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாலா தான். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கொடுக்க பணம் இல்லை என்றாலும் மனம் இருந்தால் போதும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் பாலா.

Also Read : வெள்ளித்திரையில் ஜொலிக்கும் 5 விஜய் டிவி பிரபலங்கள்.. ஜெயிலரால் ஏறிய நெல்சனின் மவுசு

காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும் பாலா வெளி உலகத்திற்கு தெரியாமல் பல உதவிகள் செய்து வருகிறார். அவர் ஒன்றும் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்தவரும் அல்ல, கோடி கோடியாய் சம்பாதிப்பவரும் அல்ல. கிடைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அன்றாட பிழைப்பை ஒட்டிக் கொண்டிருப்பவர் தான்.

ஆனாலும் தான் சம்பாதித்த பணத்தில் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்பதற்காக ஏழை மக்களுக்காக சமீபத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று வாங்கிக் கொடுத்திருந்தார். மேலும் இந்த பணியை இதோடு நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து பாலா நிறைய நன்மைகள் செய்ய இருக்கிறார். இப்போது திரைத்துறை சார்பாக பாலாவுக்கு நிறைய பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Also Read : பிக்பாஸ் சீசன் 7ல் களமிறங்கும் நான்கு கதாநாயகிகள்.. டிஆர்பிக்காக விஜய் டிவி போட்ட பக்கா பிளான்

Trending News