வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பிரியமான நடிகையை குத்தகைக்கு எடுத்த வாரிசு நடிகர்.. ஆசை தீர்ந்ததும் கழட்டிவிட்ட கொடுமை

Gossip News: அப்பாவை போலவே பெரிய நடிகராகி விட வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் நுழைந்தவர் தான் அந்த வாரிசு நடிகர். என்னதான் திறமை இருந்தாலும் வாரிசுக்கு திரைப்பட வாய்ப்புகள் என்பது தொட்டுக்கோ தொடச்சிக்கோ என்ற நிலைமையில் தான் இருக்கிறது. முட்டி மோதியும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் தான் கேரியர் போய்க் கொண்டிருக்கிறது.

என்னதான் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றி படங்கள் எதுவும் கையில் இல்லை என்றாலும் வாரிசுக்கு பெண் ரசிகைகள் அதிகம். இப்படி ஒரு ஆணை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று பெண்கள் ஏங்கும் அளவிற்கான அழகு மற்றும் வசீகரத்துடன் இருப்பதுதான் இவருடைய மிகப்பெரிய பிளஸ் ஆக இருக்கிறது.

பெண் ரசிகைகள் அதிகம் இருக்கும் நடிகர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி சொல்லியா தெரிய வேண்டும். வாரிசு நடிகர் அந்த மாதிரி விஷயத்தில் கெட்டிக்காரர் தான் என்று சொல்கிறது கோலிவுட் வட்டாரம். தன்னுடன் நடிக்கும் நடிகைகளை காதல் வலையில் வீழ்த்துவதில் கெட்டிக்காரராக இருக்கிறார் இந்த ஆணழகு ஹீரோ.

Also Read:ஆடம்பர வாழ்க்கைக்காக நடிகை செய்த அட்ஜஸ்ட்மென்ட்.. கூடவே இருந்து சகுனி வேலை பார்த்த அசிஸ்டன்ட்

அவருடன் ஒரே படத்தில் மட்டும் நடித்த பிரியமான நடிகை ஒருவரை கரெக்ட் செய்ய முயற்சி செய்திருக்கிறார் வாரிசு நடிகர். படம் படுதோல்வி அடைந்தாலும் நடிகரின் திட்டம் வெற்றியடைந்து விட்டது. பிரியமான நடிகை, வாரிசு நடிகரின் காதல் விளையாட்டில் சிக்கிக் கொண்டு, அதிக நெருக்கம் காட்ட ஆரம்பித்து இருக்கிறார்.

திருமணத்தை மீறிய உறவு

இந்த நெருக்கம் இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் அளவிற்கு போய்விட்டது. தனியாக ஒரு பிளாட் வாங்கி பிரியமான நடிகை உடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்திருக்கிறார் அந்த வாரிசு நடிகர். விஷயம் வீட்டுக்கு தெரிந்தும் வாரிசு நடிகர் பின்வாங்குவதாய் இல்லை. ஒரு கட்டத்தில் மீடியாக்கள் மோப்பம் பிடித்து இருவரின் காதல் வாழ்க்கையை அம்பலம் ஆக்கிவிட்டது.

பிரியமான நடிகையின் மீது ஆசை குறைந்த பிறகு தான் எதற்காக சினிமாவுக்கு வந்தோம் என்ற ஞாபகமே வாரிசு நடிகருக்கு வந்திருக்கிறது. இப்படியே போனால் வேலைக்கு ஆகாது என்று நடிகையுடன் இருந்த உறவை முறித்துக் கொள்ள முடிவெடுத்து பிரேக் அப் செய்து விட்டார். நடிகை எவ்வளவோ கெஞ்சியும் வாரிசு நடிகர் முடியவே முடியாது என்று சொல்லி கழட்டி விட்டு விட்டார்.

Also Read:படபிடிப்பில் ஒரு வாரமா அந்தரங்க டார்ச்சர் கொடுத்த கிழட்டு இயக்குனர்.. மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி!

Trending News