வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

உத்தம வேஷம் போட்ட நடிகர்.. லீலைகளை அம்பலமாக்கிய நடிகை

Gossip: நடிகர் வெளியில் உத்தமவேஷம் போட்ட நிலையில் அவரது அந்தரங்க லீலைகளை அவிழ்த்துவிட்டு இருக்கிறார் நடிகை. வெளி உலகத்திற்கு நல்லவர் போல் இருந்த இவரா இப்படி என யோசிக்கும் படி நடிகைக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்து இருக்கிறார்.

நடிகரின் குடும்பமே சினிமா துறையில் இருந்து வந்தவர்கள் தான். அவரது மனைவியும் படங்களில் நடித்து வரும் நிலையில் வேறு ஒரு நடிகை இடம் தவறாக அணுகி இருக்கிறார். பட வாய்ப்புக்காக போன் மூலம் நடிகை இந்த நடிகரை தொடர்பு கொண்டு உள்ளார்.

அப்போது மோசமான வார்த்தைகளில் பேசி அவரை தவறான உறவுகளுக்கு நடிகர் அழைத்தாராம். போதா குறைக்கு நடிகையின் தோழிகளையும் ஏற்பாடு செய்து தரச் சொல்லி கேட்டிருக்கிறார். இதைக் கேட்டு நடிகை அதிர்ந்து போய்விட்டார்.

நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட நடிகர்

அவருடைய மனைவியும் சினிமாவில் இருக்கும் போது இவ்வாறு வேறு நடிகை இடம் அநாகரீகமாக நடிகர் பேசியது பற்றி நடிகை வெளிப்படையாக கூறுகிறார். இப்போது அந்த நடிகருக்கு இருந்த பெயர் மொத்தமும் டேமேஜ் ஆகிவிட்டது.

ஆனால் நடிகரோ அந்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது என தற்போது கூறி இருக்கிறார். வேண்டுமென்றே தனது பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக யாரோ இவ்வாறு சதி செய்து வருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.

வெளியில் மட்டும் உத்தம வேஷம் போட்ட நடிகர்

Trending News