திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

நடிப்பை நிறுத்திய வடிவேலுக்கு நிகரான நடிகர்.. கமல் படத்தோடு எண்டு கார்டு போடும் காமெடியன்

வடிவேலுக்கு இணையான ஒரு நடிகரை தற்போது வரை தமிழ் சினிமா பார்த்ததில்லை. மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு வாழ்வு தந்தது வடிவேலு காமெடி தான். இவருடைய இடத்தை நிரப்புவதற்கு இன்னும் யாரும் வரவில்லை. ஆனால் வடிவேலுவைப் போலவே ஒருவர் காமெடியில் ஒருவர் கலைக்கி உள்ளார்.

தற்போது 66 வயதுடைய அவர் விரைவில் சினிமாவுக்கு எண்டு கார்டு போட உள்ளாராம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே காமெடிகள் இவர் அசத்தி உள்ளார். இப்போது வயது முதிர்வு காரணமாக சினிமாவில் இருந்து விலகி ஓய்வெடுக்க உள்ளார்.

Also Read :குமுறி அழுத போண்டாமணி.. மலைபோல் நம்பிய வடிவேலு செய்த பெரிய துரோகம் .

அதாவது தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த நபர் பிரம்மானந்தம். இவர் கிட்டதட்ட 1200க்கு அதிகமான படங்களில் நடித்துள்ளார். இதனால் அதிக படங்களில் நடித்த நபர் என்ற கின்னஸ் சாதனையையும் பிரம்மானந்தம் பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் மொழி, சரோஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இப்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு அவரது உடம்பு ஒத்துழைக்கவில்லையாம். இதனால் புதிதாக எந்த படத்திலும் பிரம்மானந்தம் கமிட்டாகவில்லை. ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படத்தில் மட்டும் தற்போது நடித்து வருகிறார்.

Also Read :பல கோடி பணத்தை வாரி தின்னு ஏப்பம் விட்ட வடிவேலு.. மோசமாய் இம்சை கொடுக்கும் புலிகேசி

இவர் கமல்ஹாசன் நடிப்பில் 2017 உருவான சுபாஷ் நாயுடு என்ற படத்தில் ஒப்பந்தமானார். கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த இந்த படம் சில காரணங்களினால் பாதியிலேயே தடைப்பட்டது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் அந்த படம் அப்படியே தடைப்பட்டு நின்ற பின்பு கமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் சுபாஷ் நாயுடு படம் மீண்டும் ஆரம்பித்தால் அதில் பிரம்மானந்தம் நடித்துவிட்டு சினிமாவுக்கு குட்பை சொல்ல இருக்கிறார்.

Also Read :நஷ்டத்தை ஈடு கட்ட போகும் கமல்.. வாய்ப்புக்காக 7 வருடமாக காத்திருக்கும் இயக்குனர்

- Advertisement -

Trending News