ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கமல் மாதிரி 250 படங்கள் நடித்த அஜித் அண்ணன்.. 65 வயதாகியும் சம்பவம் செய்யும் ஹீரோ

Kamal – Ajith : இப்போது உள்ள ஹீரோக்கள் வருஷத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இதில் விதிவிலக்காக சில நடிகர்கள் 200 படங்களை தாண்டி நடித்ததுண்டு. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் கமல் கிட்டத்தட்ட 250 படங்களில் நடித்துவிட்டார். இப்போதும் பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.

கமலை போலவே மற்ற ஒரு நடிகரும் கிட்டத்தட்ட 250 படங்களில் நடித்து விட்டார். இப்போது 251 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதாவது மலையாள மொழியில் பிரபலமான நடிகர் தான் சுரேஷ் கோபி. இவர் நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதி, பின்னணி பாடகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முக தன்மையை கொண்டவர்.

மலையாள சினிமாவில் கொடி கட்டி பறக்கும் சுரேஷ்கோபி தமிழில் வெறும் ஏழு படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார். அதிலும் ரசிகர்களுக்கு இவரின் முகம் தெரிய வேண்டும் என்று சொன்னால் தீனா படத்தை சொன்னாலே போதும். அந்த படத்தில் அஜித்தின் அண்ணனாக மாஸ் சம்பவத்தை சுரேஷ் கோபி செய்திருப்பார்.

Also Read : கமலை ஒதுக்கிட்டு மெகா ஹிட் கூட்டணியில் இறங்கிய ஹெச் வினோத்.. எருமையை விட பொறுமை முக்கியம் அமைச்சரே

மேலும் தேசிய திரைப்பட விருது மற்றும் கேரள மாநில திரைப்பட விருது ஆகியவற்றையும் சுரேஷ்க்கு கோபி பெற்றிருக்கிறார். இந்நிலையில் இப்போது 251 வது படத்தில் சுரேஷ்கோபி நடித்து வரும் நிலையில் அவருக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த சூழலில் இப்போது 65 வயதாகும் இவர் ஓய்வில்லாமல் படங்களில் நடித்து வருவது பாராட்டக்கூடிய விஷயம் தான். தற்போது வரை சுரேஷ் கோபிக்கு மலையாள சினிமாவில் நல்ல பெயர் இருக்கிறது. மேலும் இவர் தமிழிலும் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

Also Read : பிக் பாஸுக்கு ரெட் கார்டு கொடுக்கப் போகும் கமல்.. ஆண்டவருக்கு உமன் சேஃப்டி தான் முக்கியம்

Trending News