புதன்கிழமை, ஜனவரி 22, 2025

உதயநிதியிடம் மட்டும் உத்தமன் வேஷம் போட்ட நடிகர்.. மீண்டும் தலைவிரித்து போடும் ஆட்டம்

Udhayanithi: உதயநிதி இப்போது அரசியலில் தனி முத்திரை பதித்து வருகிறார். ஆனால் அதற்கு முன்பாகவே சினிமாவில் அவர் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய ரெட் ஜெயன்ட் நிறுவனம் இப்போது டாப் ஹீரோக்களின் படங்களை தயாரிப்பது மட்டுமல்லாமல் விநியோக உரிமை உள்ளிட்டவைகளிலும் தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது.

அதனாலேயே விஷால், விஷ்ணு விஷால், ஆர்யா போன்ற பல ஹீரோக்கள் இவருடன் ஒரு நல்ல நட்பை மெயின்டெய்ன் செய்து வருகின்றனர். ஏனென்றால் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் இவரை வைத்து தீர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான். அப்படித்தான் வடிவேலுவும் உதயநிதியுடன் நடிக்கும் போது வாலை சுருட்டி கொண்டு நல்ல பிள்ளையாக இருந்தாராம்.

இயல்பாகவே வைகைப்புயல் எந்த அளவுக்கு அட்ராசிட்டி செய்யக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனாலயே ரெட் கார்டு வாங்கி பல வருடங்கள் சினிமாவில் நடிக்க முடியாமல் ஒதுங்கி இருந்தார். இதற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் சம்பளப் பிரச்சனை, சரியான நேரத்திற்கு சூட்டிங் வராதது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

Also read: லியோ பார்த்த பின் உதயநிதி கொடுத்த முதல் விமர்சனம்.. மொத்த சீக்ரெட்டும் போச்சா, கடுப்பில் லோகேஷ்

அதனாலேயே வடிவேலுவை படங்களில் புக் செய்வதற்கு பல நடிகர்களும் தயங்கி வந்தனர். அந்த சூழலில் தான் இவருக்கு மாமன்னன் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதை விட்டு விடக்கூடாது என்பதற்காகவே வடிவேலு தன் சேட்டை எல்லாம் ஓரம் கட்டி விட்டு அதில் நடித்தாராம். அது மட்டுமின்றி உதயநிதி இருக்கும் இடத்தில் எதற்கு வம்பு என்று அவர் உத்தமன் வேஷம் போட்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து படம் வெளியாகி அவருக்கு நல்ல பெயரும் கிடைத்தது. ஆனால் அதன் பிறகு நடந்தது தான் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக மாறியது. அதாவது சமீபத்தில் லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 வெளியானது. அதன் படப்பிடிப்பின் போது வடிவேலு ஏகப்பட்ட குடைச்சலை கொடுத்திருக்கிறார். இதனால் அவருக்கும் இயக்குனர் வாசுவுக்கும் கூட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் அதை எல்லாம் கடந்து படம் வெளியானது. இதற்கு அடுத்து வடிவேலு கைவசம் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். தரமான படங்களை வெளியிட்டு வரும் இவர்கள் வைகை புயலிடம் சிக்கி என்ன பாடுபட போகிறார்களோ என்பதை தான் இப்போது கோலிவுட் வட்டாராம் பரபரப்பாக பேசி வருகிறது.

Also read: கேப்டன் கருப்பா இருக்காரு, திமிருடன் நடிக்க மறுத்த நடிகை.. ஓவர் பேச்சு, கடைசியில் வடிவேலுக்கு ஜோடியான அவமானம்

Trending News