திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்திய சினிமா வரலாற்றில் அதிக விருது வாங்கிய நடிகர்.. கமலையே திகைக்க வைத்த ஜாம்பவான்

உலக நாயகன் கமலஹாசன் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பே, தனக்கு இனி எந்த விருதும் வேண்டாம் எனவும், இனி வரும் புதிய நடிகர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு விருதுகள் கொடுங்கள் என்றும் அறிவித்து விட்டார்.

கமலின் இந்த முடிவு ஒட்டு மொத்த சினிமா உலகிற்கே அதிர்ச்சியாக இருந்தது. கமல் இப்படி என்றால் இன்னொரு நடிகர் ஒருவர் கமலையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு விருதுகளில் சாதித்து உள்ளார். அவர் இதுவரை 27 விருதுகள் வாங்கியிருக்கிறார்.

Also Read : வேட்டைக்கு ரெடியான ஆண்டவர்.. No.1 ட்ரெண்டிங்கில் பிக் பாஸ் சீசன் 6 வீடியோ

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 1970 களில் சினிமாவிற்கு வந்தவர். இவர் தான் இதுவரை 27 விருதுகள் வாங்கியிருக்கிறார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பின்னணிப் பாடகர், படத்தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற பன்முகங்களை கொண்டவர்.

இவர் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், மற்றும் பன்னிரண்டு பிலிம்பேர் விருதுகள் வாங்கியுள்ளார். அதிலும் பிலிம்பேர் விருதுகளில் சிறந்த நடிகர் என்று அதிக முறை பரிந்துரைக்கப்பட்டவர் இவர் தான். மேலும் பத்மஸ்ரீ , பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

Also Read : யாருக்கு வேணும் உப்புச்சப்பில்லாத அந்த அவார்டு.. கடும் கோபத்தில் சிவாஜியை தடுத்த கமல்

2015 ஆம் ஆண்டு இவர் நடித்த பிக்கு திரைப்படத்திற்காக நான்காவது முறை தேசிய விருது வாங்கினார். மேலும் பிலிம் பேர் விருது, மாநில விருதுகளையும் வாங்கினார். இவரோடு சேர்ந்து நடித்த தீபிகா படுகோனும் விருது வாங்கினார்.

2009 ஆம் ஆண்டு பா என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அபிஷேக் பச்சனும், வித்யா பாலனும் நடித்திருந்தனர். இந்த படத்தில் அபிஷேக் அப்பாவாகவும், அமிதாப் மகனாகவும் நடித்திருந்தார். இந்த படத்திற்காக அமிதாப் மூன்றாவது முறை தேசிய விருது வாங்கினார்.

Also Read : சிம்பு மீது கடும் கோபத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள்.. கமல் நீங்களுமா இதற்கு உடந்தை

Trending News