ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜயகாந்தால் கிடைத்த அடையாளம்.. அடியாளாக இருந்து வில்லனாக ப்ரமோஷன் பெற்ற நடிகர்

Actor Vijayakanth: தன்னை தேடி வந்தவர்களை கை தூக்கி விடும் வெகு சில நடிகர்களில் முக்கியமானவர் தான் விஜயகாந்த். இவருடைய அருமை பெருமைகளை அந்த காலத்திலிருந்தே துணை நடிகர்கள் முதற்கொண்டு பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இவரால் தனக்கு கிடைத்த அடையாளத்தை பற்றி ஒரு நடிகர் வெளிப்படையாக மனம் திறந்து பேசி உள்ளார்.

அதாவது பொன்னம்பலம் ஆரம்ப காலத்தில் ஒரு அடியாளாகத்தான் சினிமாவிற்குள் வந்தார். அப்படி இவர் நடிக்கும் படங்களில் எல்லாம் ஹீரோக்களிடம் அடி வாங்கி உடம்பை பஞ்சர் ஆக்கிக் கொள்ளும் கேரக்டர் தான் இவருக்கு கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் 4 நாட்கள் ஷூட்டிங் சென்றால் 20 நாட்கள் வரை ஹாஸ்பிட்டலில் தான் இருப்பாராம்.

Also read: ஏக்கத்துடன் இருந்த வடிவேலுவை தூக்கி விட்ட விஜயகாந்த்.. நன்றியை மறந்து அசிங்கப்படுத்திய கொடுமை

அந்த அளவுக்கு இவர் சண்டை காட்சிகளால் பலத்த காயம் அடைந்திருக்கிறார். இதனால் வெறுத்துப்போன பொன்னம்பலம் விஜயகாந்திடம் ஒரு முறை நான் சினிமாவை விட்டு செல்கிறேன் என்று கூறியிருக்கிறார். உடனே கேப்டன் அப்படியெல்லாம் சொல்லாத நீ வில்லனாக நடி, அப்போ உனக்கு இந்த அளவுக்கு கஷ்டம் இருக்காது என்று கூறி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து என் படத்திலேயே உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்று எஸ்ஏ சந்திரசேகரிடம் அவரை அனுப்பி இருக்கிறார். அந்த சமயத்தில் விஜய்யை தூக்கி விடுவதற்காக விஜயகாந்த் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். அதில் தான் பொன்னம்பலத்திற்கு வில்லன் கதாபாத்திரத்தை அவர் வாங்கிக் கொடுத்தாராம்.

Also read: விஜயகாந்த் பெயர் சொன்னதால் வாய்ப்பு தர மறுத்த வடிவேலு.. தூக்கிப் போட்டு மிதித்து இருப்பேன்!

அது மட்டும் இன்றி அந்த சமயத்தில் பொன்னம்பலம் 50,000 ரூபாய் சம்பளம் கிடைத்தால் போதும் கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு எஸ்ஏ சந்திரசேகரை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது அவர் செக்கை கொடுத்து வீட்டிற்கு சென்று பிரித்து பாருங்கள். என்னால் இவ்வளவு சம்பளம் தான் கொடுக்க முடியும். விஜயகாந்த் தம்பி சொல்லிவிட்டதால் உங்களுக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார்.

ஒரு பயத்துடன் அதை எடுத்துக் கொண்டு சென்ற பொன்னம்பலம் சாமி அறையில் அதை வைத்துவிட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு பிரித்து பார்த்திருக்கிறார். அதை பார்த்ததும் அவர் கண்ணீர் விட்டு கதறி இருக்கிறார். ஏனென்றால் அந்த படத்திற்கான அட்வான்ஸ் தொகையே ஒரு லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் சம்பளமாக 2.75 லட்சம் பேசப்பட்டிருந்ததாம்.

Also read: விஜயகாந்த் போல் சுதாகரிக்க தெரியாமல் இமேஜை கெடுத்த விஜய் சேதுபதி.. தொடர்ந்து தேடி வரும் வாய்ப்பு

அதைத்தொடர்ந்து செந்தூரப்பாண்டி மூலம் அவருக்கு அடுத்தடுத்த வில்லன் வாய்ப்புகளும் கிடைத்தது. இதை தற்போது நினைவு கூர்ந்துள்ள பொன்னம்பலம் இந்த வாழ்க்கையே விஜயகாந்த் போட்ட பிச்சைதான். அவர் மட்டும் இல்லை என்றால் எனக்கு அடையாளமே இல்லாமல் போயிருக்கும் என்று நெகிழ்ந்து போய் கூறி இருக்கிறார்.

Trending News