திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

காணாததை கண்டது போல் போட்ட ஆட்டம்.. பெண் மோகத்தால் வாழ்க்கையை தொலைத்த நடிகர்

கையில் கொஞ்சம் காசு பார்த்து விட்டாலே ஒருவருடைய நடவடிக்கை முற்றிலுமாக மாறிவிடும் என்பதற்கு அந்த நடிகர் தான் உதாரணமாக இருக்கிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றத்துடன் இயல்பாக நடித்து முன்னணி அந்தஸ்தை அடைந்த அந்த ஹீரோ இப்போது வாழ்க்கையை தொலைத்து விட்டு திண்டாடிக் கொண்டிருக்கிறார்.

அவர் பக்கா ஜென்டில்மேன் என வார்த்தைக்கு வார்த்தை சொல்லி வந்தவர்கள் கூட இப்போது வாயடைத்து போய் இருக்கின்றனர். அந்த அளவுக்கு நடிகருடைய பெயர் இப்போது மொத்தமாக கெட்டுப்போய் நாறி கிடக்கிறது. அதிலும் பெண் விஷயத்தில் இந்த நடிகர் இப்படிப்பட்டவரா என்ற அதிர்ச்சி தான் அனைவருக்கும் இருக்கிறது.

சமீபத்தில் இவருடைய முகத்திரையை இசை பிரபலம் கிழித்த நிலையில் நடிகரின் வலையில் சிக்கிய நடிகைகள் யார் யார் என்ற ஒரு பெரிய பட்டியலே இப்போது இணையதளத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. இப்படி கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக நடிகரின் அந்தரங்கள் ஒவ்வொன்றும் அம்பலமாகி வருகிறது.

இது அவருடைய குடும்பத்திற்குள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது மனைவியும் அவரை விட்டு பிரிந்து விட்டார் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடிகர் கலந்து கொண்ட ஒரு விழாவில் கூட தர்ம பத்தினியை காணவில்லை.

எப்போதும் காதல் கணவனை பிரியாது அட்டை போல் ஒட்டிக்கொண்டே திரியும் அவர் இதில் கலந்து கொள்ளாதது பல சந்தேகங்களுக்கு வழி வகுத்துள்ளது. தன்மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்கும் முயற்சியில் தற்போது தீவிரமாகி இருக்கும் நடிகர் பல முக்கிய பிரபலங்களுக்கு ஏகப்பட்ட பணத்தை தண்ணியாக செலவழித்து வருகிறாராம்.

ஆனாலும் இந்தப் பிரச்சனை இன்னும் தீர்ந்த பாடில்லை. தற்போது சோசியல் மீடியாவையே ரணகளப்படுத்தி வரும் இந்த விவகாரம் நடிகரின் கேரியருக்கும். ஆப்பு வைத்த நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த விஷயம் தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Trending News