வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கமல் கெஞ்சியும் நடிக்க மறுத்த நடிப்பு அசுரன்.. கடைசிவரை நிறைவேறாமல் போன ஆசை

kamal: கமல் சினிமாவில் கற்றும் தெரிந்த ஞானி என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அனைத்து விஷயங்களை கரைத்துக் குடித்து தன்னுடைய படங்களில் தத்துரூபமாக நடித்துக் வரக்கூடியவர். அப்படிப்பட்ட இவருடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று பல பிரபலங்களும் ஏங்கிக் கொண்டு வருகிறார்கள்.

இப்படி இருக்கும் பட்சத்தில் கமல் இன்னொரு ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அதனால் அந்த ஹீரோவை ரொம்ப கெஞ்சி மன்றாடி சேர்ந்து நடிப்பதற்கு கூப்பிட்டு இருக்கிறார். கமல் கூப்பிடுகிறார் என்றால் அந்த நடிகரின் நடிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் அவர் ஒரு நடிப்பு அசுரன் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பை பின்னி பெடல் எடுக்கக் கூடியவர். அப்படிப்பட்டவர் யார் என்றால் பாலிவுட் நடிகர் திலீப் குமார். அத்துடன் கமலை அதிக அளவில் கவர்ந்த பன்முக நடிகர். அதன் காரணமாக கமல் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான தேவர் மகன் படத்தை ரீமேக் செய்து ஹிந்தியில் நடிக்க வேண்டும் என்று கமல் ஆசைப்பட்டிருந்தார்.

Also read: சிவகார்த்திகேயனை நம்பி தெருவுக்கு வந்த கமல்.. 2000 கோடி போச்சு சோனமுத்தா

அப்பொழுது சிவாஜி நடித்த கதாபாத்திரத்துக்கு திலிப் குமார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து நடிகர் திலிப் குமாரை கேட்டு கெஞ்சி இருக்கிறார். ஆனால் அவரோ அந்த சமயத்தில் வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணமாக கமல் கூப்பிட்டதற்கு மறுத்துவிட்டார். அதன் பின்னரே 1997 ஆம் ஆண்டு அனில் கபூர் மற்றும் அம்ரிஷ் பூரிக்கு வாய்ப்பை கொடுத்து தேவர் மகன் படத்தை விராசத் என்று ஹீமேக் ரீமேக் பண்ணி இருந்தார்.

இதனால் கமல் ஆசைப்பட்ட கனவு கடைசி வரை நிறைவேறாமல் போய்விட்டது. அடுத்து கொஞ்சம் வருடங்களுக்கு பின் நடிகர் திலீப் குமார் 2021 ஆம் ஆண்டு அவருடைய 98வது வயதில் காலமாகிவிட்டார். இப்படி இவருடைய ஆசை நிறைவேறாமல் போனதனாலையே, தற்போது இளம் நடிகர்கள் யாராவது கமலுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தாலே கமல் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து விடுகிறார். தனக்கு கிடைக்காத ஒரு விஷயம் மற்றவர்களுக்கு நிராசையாக போய்விடக் கூடாது என்பதில் கமல் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Also read: அக்கடதேசத்தில் துரத்தி அடிக்கப்பட்ட கமல்.. பல வருடங்கள் மறைக்கபட்ட மாஃபியா கும்பலின் ரகசியம்

Trending News