வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2 முறை திருமணம் செய்தும் ஆசை அடங்காத நடிகர்.. நடிகையின் வாழ்க்கையை நாசம் செய்த கொடுமை

Gossip News: நடிகர் ஒருவர் செய்த காதல் லீலைகளால், நடிகையின் வாழ்க்கையே மொத்தமாக கேள்விக்குறியான சம்பவம் தற்போது வெளியாகி இருக்கிறது. ரசிகர்களிடையே தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் நல்ல பெயரை வாங்கிய இந்த நடிகருக்கு பல பெண் ரசிகைகளும் அதிகம் இருக்கிறார்கள். மேலும் நடிகைகளும் இவருடன் போட்டி போட்டு நடிக்கும் அளவிற்கு இந்த நடிகர் மீது கிரஷில் இருக்கிறார்கள்.

தனக்கிருக்கும் வரவேற்பை இந்த நடிகர் தன்னுடைய காதல் லீலைகளுக்கு வசதியாக மாற்றி இருக்கிறார். நடிகைகளுடன் காதலிப்பது போல் பழகுவது, பின்னர் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கழட்டி விடுவது என வழக்கமாகக் கொண்டிருக்கும் இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.

Also Read:அந்தரங்க மெசேஜ், கொலை மிரட்டல்.. சீரியல் நடிகையை நம்பி மோசம் போன அப்பாவி கணவர்

இந்த நிலையில் அந்த அழகான நடிகையுடன் தொடர்ந்து நடித்து வந்த இவர் அவரையும் தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார். நடிகையும் இவர் மீது தீராத காதலுடன் பழகி இருக்கிறார். இவர்களுடைய காதல் நாளுக்கு நாள் நெருக்கத்தை அதிகரிக்க மீடியாக்களும் இருவரும் காதலிப்பதாகவும், நெருங்கிய உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளியிட ஆரம்பித்து விட்டன.

நடிகரின் மீது காதல் பைத்தியமாக இருந்த அந்த நடிகை, தன்னுடைய காதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி திருமணம் செய்ய சொல்லி இருக்கிறார். நடிகர் இந்த சமயத்தில் தான் தன்னுடைய உண்மை முகத்தை காட்டியிருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனதை சுட்டிக்காட்டி இனி திருமணம் செய்தால் பெயர் கெட்டுவிடும் என சொல்லி நடிகையை கழட்டி விட்டு விட்டார்.

தன்னால் முடிந்த வரை போராடி பார்த்த அந்த நடிகை, ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் அவரை விட்டு விலகி இருக்கிறார். இருந்தாலும் மற்றவர்களைப் போல் தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அந்த நடிகை விரும்பவில்லை. ஏமாற்றிய காதலரை மறக்க முடியாமல், திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருகிறார்.

Also Read:பிஞ்சிலேயே கள்ளிப்பால் ஊத்தி கொன்று இருக்கணும்.. 15 வயதில் 45 நிமிடங்கள் இடைவிடாது கிஸ் அடித்த ஹீரோ

Trending News