MGR : எம்ஜிஆர் என்றால் அள்ளிக் கொடுக்கக்கூடியவர் என்று தான் இப்போதும் அவருக்கு பெயர் இருந்திருக்கிறது. அவரது வீட்டிற்கு யார் சென்றாலும் சாப்பிட்டு தான் வருவார்களாம். உதவி என்று கேட்டால் உடனடியாக செய்யக்கூடியவர்.
அப்படிப்பட்ட எம்ஜிஆர் ஆல் ஒருவர் கடனை அடைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்ற நிலைமையும் ஏற்பட்டது தான் இருக்கிறது. எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒத்துக்கொண்ட பின் அந்தப் படத்தில் நடிக்காததால் மிகுந்த நஷ்டத்தை காமெடி நடிகர் ஒருவர் சந்தித்துள்ளார்.
அதாவது எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் கொடிகட்டி பறந்த காமெடி நடிகர்கள் நாகேஷ் மற்றும் சந்திரபாபு. அவ்வாறு புகழ்பெற்ற சந்திரபாபு காமெடி நடிகராக மட்டும் அல்லாமல் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார். படத்தை இயக்க, தயாரிக்க இறங்கிய நிலையில் அதில் நஷ்டத்தை சந்தித்துள்ளார்.
எம்ஜிஆர் ஆல் நஷ்டத்தை சந்தித்த நடிகர்
அப்போது எம்ஜிஆரை வைத்து ஒரு படத்தை இயக்கினால் கண்டிப்பாக இந்த நஷ்டத்தை எல்லாம் ஈடுகட்டி மீண்டும் நல்ல நிலைமைக்கு வந்துவிடலாம் என்று சந்திரபாபு நினைத்தார். அதன்படி சந்திரபாபு சொன்ன கதையும் எம்ஜிஆருக்கு பிடித்துவிட்டது.
அந்தப் படத்திற்கு மாடி வீட்டு ஏழை என்று டைட்டிலும் வைத்து, எம்ஜிஆருக்கு ஜோடியாக சாவித்திரியையும் தேர்வு செய்து உள்ளனர். அதோடு பூஜையும் போடப்பட்டு பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. எப்போதுமே எம்ஜிஆர் நடிப்பை கிண்டல் செய்வதை வழக்கமாக சந்திரபாபு வைத்திருப்பார்.
அவ்வாறு படப்பிடிப்பு தளத்தில் எம்ஜிஆருக்கு நடிப்பு தெரியவில்லை என்று சந்திரபாபு தொடர்ந்து கிண்டல் செய்த நிலையில் கோபப்பட்டு படப்பிடிப்பில் இருந்து எம்ஜிஆர் கிளம்பிவிட்டார். அதன் பிறகு வேறுபடங்களில் எம்ஜிஆர் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் சந்திரபாபு அந்த படத்திற்காக போட்ட செட்டு வாடகை அதிகரித்தே சென்று கொண்டிருந்த நிலையில் எம்ஜிஆரை அணுகி மீண்டும் நடிக்க கூப்பிட்டுள்ளார். அப்போது கால்ஷீட்டுக்காக தனது அண்ணன் சங்கரபாணியை பார்த்து பேசுங்கள் என்று எம்ஜிஆர் கூறிவிட்டாராம்.
அப்போது சங்கரபாணி மற்றும் சந்திரபாபு இடையே சண்டை முற்றிய நிலையில் அவரை அடிக்க சந்திரபாபு கையை ஓங்கி விட்டாராம். இந்த விஷயம் எம்ஜிஆருக்கு தெரிந்து இனி உன் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டாராம். இதைத்தொடர்ந்து கடன் சுமை அதிகரித்து குடிக்கு அடிமையாகி சந்திரபாபு மோசமான நிலைக்கு சென்றுவிட்டாராம்.
காலம் கடந்து பேசும் எம்ஜிஆர் பெருமை