நடிகர் விவேக் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக இறந்த செய்தி தமிழ் நாட்டை மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் பல நட்சத்திரங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த அளவுக்கு பல நல்ல காரியங்களை செய்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரானாக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விவேக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்த நாளே அவருக்கு எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.
இதற்கான காரணம் தடுப்பூசி இல்லை என ஒருபக்கம் அரசாங்கம் தெரிவிக்க, வேறு சில மருத்துவர்கள் தடுப்பூசி தான் காரணம் என அடித்துக் கூறி வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். இதனால் நடிகர் விவேக்கின் மரணத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் விவேக்கிற்கு பல நட்சத்திரங்கள் வீடியோ மூலமாகவும் நேரிலும் அஞ்சலி செலுத்தினார். அந்த வகையில் வயது முதிர்வின் காரணமாகவும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் விவேக்கின் இறுதி அஞ்சலியில் ரஜினிகாந்த் மற்றும் கமல் போன்றோர் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் அவர்கள் அஞ்சலி செலுத்தவும் தவறவில்லை. அந்த வகையில் நடிகர் கமலஹாசன் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீண்ட காலமாக விவேக் தன்னுடன் நடிக்க வேண்டும் என ஆர்வமாக இருப்பதை கூறியிருந்தார்.
அதன் காரணமாகவே இந்தியன் 2 படத்தில் வாய்ப்பு கொடுத்ததாகவும் சிலநாட்கள் நடித்தாலும் தன்னுடைய நினைவில் இருந்து நீங்க முடியாத அளவுக்கு என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியவர் விவேக் என்றார். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் விட்டுப் பிரிவார் என எதிர்பார்க்கவில்லை என கண்கலங்கியுள்ளார் கமல்.