சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வடிவேலு எவ்வளவு அடிச்சும் ஆலமரம் போல் வளர்ந்த நடிகர்.. வேறு வழியில் சென்று வெற்றிகண்ட பிரபலம்

Vadivelu: வடிவேலு திறமையால் முன்னுக்கு வந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இப்போது பல நடிகர்கள் அவருடன் இருந்ததால் எங்கள் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள். அதுவும் தங்களுக்கு நிறைய டயலாக் கொடுக்க மாட்டார், சம்பளமும் அதிகம் கொடுக்க மாட்டார் என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.

மேலும் கோவை சரளாவுக்கு கூட வடிவேலு வாய்ப்பு மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதேபோல் வடிவேலுவால் பிரபல நடிகர் ஒருவருக்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில் வேறு வழியில் சென்று ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறார். அதோடு மட்டுமல்லாமல் பேரும், புகழையும் அடைந்திருக்கிறார்.

Also Read : வயிறு குலுங்க சிரிக்க வைக்க டாப் 7 காமெடி நடிகர்கள் வாங்கும் சம்பளம்.. வடிவேலு முதல் யோகி பாபு வரை

அவர் வேறு யாரும் இல்லை தம்பி ராமையா தான். ஆரம்பத்தில் நிறைய படத்தில் வடிவேலு வாய்ப்பு கொடுக்காமல் தம்பி ராமையாவை கழட்டி விட்டிருக்கிறார். அதன் பிறகு தனக்கான தனி டிராக்கை தேர்ந்தெடுத்து குணச்சித்திரம் என தனக்கு எந்த மாதிரி கதாபாத்திரம் வருமோ அதை நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு காமெடியனாகவும் கலக்கி தனக்கான முத்திரையை பதித்துக் கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் சினிமாவை தாண்டி நிறைய விஷயங்களில் இவருக்கு ஆர்வம் இருக்கிறது. மேலும் ரஜினிகாந்த் கூட தம்பி ராமையாவை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார். ஏனென்றால் எந்த தலைப்பு கொடுத்தாலும் அதைப்பற்றி பேசக்கூடிய அளவுக்கு அறிவு தம்பி ராமையாவுக்கு இருக்கிறது.

Also Read : நங்கூரம் போல் வடிவேலுக்கு மட்டுமே போட்ட ரெட் கார்டு.. அதைவிட மோசமாய் இருந்து எஸ்கேப் ஆன 2 நடிகர்கள்

மேலும் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இரண்டு படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். மைனா, கும்கி போன்ற படங்களில் இவரது நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கும். காமெடி மட்டுமே தனக்கு வரும் என்ற முத்திரையை உடைத்து சாட்டை படத்தில் வில்லனாகவும் தம்பி ராமையா மிரட்டி இருந்தார்.

இவ்வாறு வடிவேலுவின் சூழ்ச்சியால் வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும் தனக்கான திறமை மூலம் நிரூபித்து காட்டி இருக்கிறார் தம்பி ராமையா. இப்போதும் இவர் நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : அர்ஜுன் பொண்ணு தான் மருமகள்.. தம்பி ராமைய்யாவுக்கு முன்பாகவே சஸ்பென்சை உடைத்த பிரபலம்

Trending News