திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினி, கமலை ஓரங்கட்டிய நடிகர்.. ஒரு மணி நேரத்திற்கு வாங்கிய சம்பளம்

அந்த காலத்தில் அதிக சம்பளம் வாங்கிய பிரபலங்கள் என்றால் ரஜினி, கமல், ஸ்ரீதேவி தான். இவர்கள் தான் அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கோலோச்சி இருந்தனர். அப்போது 16 வயதினிலே படத்திற்கு கமல் 20000 சம்பளம் பெற்றார். மேலும் இப்படத்திற்கு ஸ்ரீதேவிக்கு 5000 சம்பளம் கொடுக்கப்பட்டது.

அந்த படத்தில் வில்லனாக நடித்த ரஜினிக்கு 3000 தான் சம்பளம் கொடுக்கப்பட்டது. அதன் பின்பு ரஜினி ஹீரோ அந்தஸ்தை பெற்றவுடன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து கமலுக்கு இணையான சம்பளத்தை பெற்றார். கமல், ரஜினி இதுவருமே போட்டி போட்டுக் கொண்டு அதிக சம்பளத்தை வாங்கி வந்தனர்.

Also Read: இப்ப வரை மீனா க்ரஷில் இருக்கும் அந்த ஹீரோ.. ரஜினி கமலுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்திய நடிகர்

அந்தச் சமயத்தில் இவர்களையே மிஞ்சும் அளவிருக்கு சம்பளம் வாங்கிய நடிகர் ஒருவர் இருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று பேசி தயாரிப்பாளரிடம் சம்பளம் பெற்றுக் கொள்வாராம். அதாவது டாப் ஹீரோக்களை விட வருடத்திற்கு பல படங்கள் நடித்து வந்தவர் தான் காமெடி நடிகர் கவுண்டமணி.

இவர் தான் முதன்முதலாக சினிமாவில் நேர சம்பளம் பெற்ற நடிகர். கவுண்டமணி ஒரு மணி நேரத்திற்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக வாங்கி உள்ளார். ஏனென்றால் ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேலாக கமிட்டாகி நடித்து வருவாராம்.

Also Read: மயில் நடிகை மீது ரஜினிக்கு இருந்த காதல்.. சென்டிமென்ட் பார்த்து தவறவிட்ட சூப்பர் ஸ்டார்

ஆகையால் ஒவ்வொரு படத்திற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி நடித்து கொடுத்துவிட்டு செல்வாராம். அதற்கு ஏற்றார் போல் சம்பளத்தையும் வாங்கிக் கொள்வாராம். அதை கணக்கிட்டு பார்த்தால் அப்போது ரஜினி, கமலை விட கவுண்டமணி தான் அதிக சம்பளம் பெற்று இருக்கிறார்.

இப்போது பார்த்தால் ஹீரோக்கள் நூறு கோடியை தாண்டி சம்பளம் பெற்று வருகிறார்கள். இதில் பாதியைக் கூட காமெடி நடிகர்கள் வாங்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு லட்சக்கணக்கில் தான் சம்பளம் இருந்து வருகிறது. ஆனால் அப்போது கவுண்டமணி டாப் நடிகர்களான ரஜினி, கமலை ஓரம் கட்டி உள்ளார்.

Also Read: கவுண்டமணியை வெறுத்து ஒதுக்கிய உலகநாயகன்.. இருவரின் விரிசலுக்கு இதுதான் காரணம்

Trending News