வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாலாவையே மிஞ்சும் அளவுக்கு ஈகோ காட்டும் நடிகர்.. 4 வருட உழைப்புக்கு கிடைத்த அவமரியாதை

இதுதான் சந்தர்ப்பம் என்று தற்போது இயக்குனர் பாலாவை பலரும் ஒதுக்கி வருகின்றனர். விவாகரத்து, பிரிவு என அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வந்த பாலா ரொம்பவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். சமீபத்தில் அவரை நேரில் சந்தித்த பலரும் பாலா ஆளே மாறி போய் பெரும் சோகத்தில் இருக்கிறார் என்ற செய்தியை சொல்லி வருகின்றனர்.

மேலும் இது மனசோர்வா இல்லை உடல் சோர்வா என்று தெரியவில்லை எனவும் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் பாலாவுக்கு இப்போது மிகப்பெரும் மன உளைச்சல் தான் ஏற்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் பல காரணமும் இருக்கிறது. திரையுலகில் இப்போது முன்னணியில் இருக்கும் பல ஹீரோக்களையும் ஆரம்ப காலத்தில் வளர்த்து விட்டவர் தான் பாலா.

Also read : அடுத்த தேசிய விருதை வாங்க ரெடியாக இருக்கும் சூர்யா.. அடுத்தப் படத்தை அறிவித்த கெத்தான இயக்குனர்

சூர்யா, விக்ரம், ஆர்யா என்று பல நடிகர்களை உதாரணமாக சொல்லலாம். ஆனால் தற்போது அந்த நடிகர்கள் யாரும் பாலாவை கண்டு கொள்வதே கிடையாதாம். அதிலும் பாலா தற்போது இயக்கி வரும் வணங்கான் திரைப்படத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் இந்த திரைப்படத்தை பாலா கடந்த நான்கு ஆண்டுகளாக பார்த்து பார்த்து தயார் செய்திருக்கிறார்.

அதிலும் சூர்யாவை மனதில் வைத்து தான் அவர் இந்த கதையையே உருவாக்கி இருக்கிறார். அப்படி இருக்கையில் சூர்யா இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை கொடுத்து வருவது அவருக்கு மனவேதனையை அளித்துள்ளது. தயாரிப்பாளர், நடிகர் என பிசியாக இருக்கும் சூர்யா இந்த திரைப்படத்திற்காக மிக குறைந்த நாட்கள் மட்டுமே கால்ஷூட் கொடுத்திருக்கிறார்.

Also read : ஷூட்டிங்கில் கரடு முரடாக நடந்து கொள்ளும் 5 இயக்குனர்கள்.. கொடுமைக்கு பெயர்போன பாலா

ஆனால் காட்சிகள் எதிர்பார்த்த அளவு வர வேண்டும் என்பதற்காக பாலா மீண்டும் மீண்டும் ஒரே சீனை சூட் செய்திருக்கிறார். இது பாலா இயக்கும் படங்களில் வழக்கமாக நடப்பது தான். ஆனால் இதுதான் சூர்யாவை கடுப்பேற்றி இருக்கிறது. அதனால் அவர் இப்போது வணங்கான் படத்தை டீலில் விட்டுவிட்டு சூர்யா 42 படத்தில் நடிக்க சென்று விட்டார்.

தன்னுடைய நான்கு வருட உழைப்பு வீணாக போய் விடக்கூடாது என்று பாலா அவரிடம் எவ்வளவோ சமாதானம் பேச முயன்றிருக்கிறார். ஆனால் சூர்யா அதற்கு உடன்படவில்லை. அந்த வகையில் சூர்யா, பாலாவையே மிஞ்சும் அளவுக்கு ஈகோவுடன் இருந்து வருகிறார். இதுதான் பாலாவின் தற்போதைய மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கிறது.

Also read : தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கும் பாலா.. ஆர்யாவை தொடர்ந்து மாட்டிக் கொண்ட சூர்யா

Trending News