செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பழம் நழுவி பாலில் விழுந்த கதைதான்.. குறும்புக்கார ஹீரோவே கதியென கிடந்த நடிகை

குறும்புக்கார ஹீரோ மிகவும் விளையாட்டான குணாதிசயம் கொண்டவர், தன்னுடன் நடிக்கும் நடிகைகள் அனைவரையுமே வலையில் வீழ்த்தி விடுவார். அப்படிபட்ட கெட்டிக்காரரான நடிகர் சினிமாவில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார். ஆனாலும் தன்னுடைய வாலை சுருட்டி கொண்ட பாடு இல்லை.

அப்படிதான் ஒரு நடிகையுடன் மூன்றெழுத்து படத்தில் ஹீரோ நடிக்கும் போது நெருக்கமான காட்சி இடம் பெற்றுள்ளது. படத்தில் தான் இந்த கெமிஸ்ட்ரி என்றால் நிஜத்திலும் இது ஓர்கவுட் ஆகி இருக்கிறது. ஆகையால் பழம் நழுவி தானாகவே பாலில் விழுந்து இருக்கிறது. ஆனால் குறும்புக்கார ஹீரோவோ ஏற்கனவே திருமணம் ஆனவர்.

Also Read : மனைவி இருக்கும் போதே நடிகைக்கு தாலி கட்டிய வாரிசு நடிகர்.. நான்கே மாதத்தில் முடிவு கட்டிய அப்பா!

மேலும் அவரது மனைவி நடிகரிடம் சொன்னாலும் அவர் கேட்ட பாடு இல்லை என்பதால் தான் போக்குக்கு மனைவியும் சென்று விட்டார். இதுவே இவருக்கு இன்னும் சுதந்திரம் கொடுத்தது போல் ஆக எல்லா நடிகைகளுடனும் எல்லை மீறி செல்ல ஆரம்பித்தார். ஆனாலும் நடிப்பில் அவரைப் பற்றி எந்த குறையும் சொல்ல முடியாது.

இதனால் தான் பெண்கள் விஷயத்தில் அவர் வீக்காக இருந்தாலும் பட வாய்ப்பு அவருக்கு தொடர்ந்து வந்து கொண்டு தான் இருந்தது. இந்நிலையில் நடிகையோ ஒரு கட்டத்திற்கு மேல் இப்படியே இருந்தால் வேலைக்காகாது என வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போதும் விடாமல் இந்த ஹீரோ நடிகையை தொந்தரவு செய்து இருக்கிறார்.

இந்த விஷயம் நடிகையின் கணவருக்கு தெரிந்த உடனே விவாகரத்து கொடுத்துவிட்டார். அரசனை நம்பி புருஷனை கைவிட்டு விட்டோமே என நடிகை சிறிது காலம் அச்சத்தில் இருந்தார். ஆனால் அதன் பிறகும் இந்த ஹீரோ நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன் என்று இப்போதும் நடிகையுடன் உறவில் இருந்து வருகிறார். நடிகையும் ஹீரோவே கதி என இருக்கிறார்.

Also Read : கள்ளக்காதல் பட நடிகை என கூப்பிடுறாங்க.. குப்பையான கதையால் கேரியரே தொலைத்த பரிதாபம்

Trending News